For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எல்லாரும் ஏமாத்திட்டாங்க.. யாருமே கஷ்டப்படுற நேரத்தில கை கொடுக்கல.. புலம்பும் பிரபல நடிகை!

  By Staff
  |

  சென்னை: ஸ்லிம்மாக இருக்கும் போது பட வாய்ப்புகள் லைன் கட்டி குவிந்து வந்த நிலையில், தற்போது உடல் எடை அதிகமானதால் அந்த நடிகையை யாருமே தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுத்து வருவது நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

  தென்னிந்தியாவிலேயே முன்னணி நடிகையாக கெத்துக் காட்டி வந்த அந்த பிரபல நடிகைக்கு தற்போது ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்பு வருவதில்லையாம்.

  ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை தேர்வு செய்து நடித்தும் அந்த படங்களும் சொதப்பிய நிலையில், நடிகையை நெருங்கிய நண்பர்களே ஓரங்கட்டி விட்டது பெரும் மனவேதனையில் ஆழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

   என் படம் தமிழ்ல ஓடாதுன்னு சொன்னாங்க...நீங்க யாருய்யா தீர்மானிக்க?... கொந்தளித்த சுதா கொங்கரா! என் படம் தமிழ்ல ஓடாதுன்னு சொன்னாங்க...நீங்க யாருய்யா தீர்மானிக்க?... கொந்தளித்த சுதா கொங்கரா!

  உச்சத்தில் மார்க்கெட்

  உச்சத்தில் மார்க்கெட்

  ஒரு காலத்தில் அந்த நடிகையின் கால்ஷீட் கிடைக்காதா என பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், முன்னணி நடிகர்களும் க்யூவில் வரிசையாக இருந்து வந்தனர். நடிகையின் நடனத்தை பார்க்கவே அப்படியொரு கூட்டம் அலைமோதும். ஆனால், அந்த நடிகருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது தான் நடிகை பண்ண பெரிய தப்பு என அவரே தற்போது யோசித்து வருகிறார்.

  அதிகரித்த உடல் எடை

  அதிகரித்த உடல் எடை

  நடிகர்கள் அளவுக்கு நீங்களும் ரிஸ்க் எடுத்து நடிங்க, வேறலெவலில் விருதுகள் குவியும் என அந்த நடிகர் உசுப்பேத்தி விட்ட நிலையில், ஓவராக உடல் எடை அதிகரித்ததன் விளைவு தான் இன்னமும் அதில் இருந்து அந்த நடிகையால் வெளியே வரவே முடியாமல் தவித்து வருகிறாராம். மேலும், ஹீரோவும் அப்படியொரு தோற்றத்தை பார்த்த பின்னர் நடிகையை நைசாக கழட்டி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.

  வீண் செலவு

  வீண் செலவு

  பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் நடிக்கும் போது நடிகையை கமிட் பண்ணி விட்டோமே என்பதற்காக அதிக பொருட் செலவு செய்து நடிகையை ஸ்லிம்மாக அழகாக காட்டியிருந்தார். ஆனால், அதற்காக பல கோடி செலவு ஆன நிலையில், இதற்கு மேல் இந்த நடிகை நமக்கு வேண்டாம், பாலிவுட்டில் சிக்கென இருக்கும் முன்னணி நடிகையை வைத்து படம் பண்ணலாம் என அவரும் நகர்ந்து விட்டார்.

  தொடர் தோல்வி

  தொடர் தோல்வி

  நெருங்கிய நண்பர்களாக இருந்த ஹீரோக்கள் பலரும் ஸாரி சொல்லி ஒதுங்கி செல்ல, ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலாவது நடித்து தனது மார்க்கெட்டை பிடிக்கலாம் என நினைத்த நடிகைக்கு அதுவும் சரியான அளவில் கைகொடுக்காத நிலையில், தொடர் தோல்வியை சந்தித்தார். அதன் காரணமாக தயாரிப்பாளர்கள் பெரிய கும்பிடு போட்டு ஓடிவிட்டனர்.

  புலம்பும் நடிகை

  புலம்பும் நடிகை

  மீண்டும் எப்படியாவது தனது இடத்தை பிடித்தாக வேண்டும் என்கிற முனைப்புடன் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நடிகை சமூக வலைதளங்களில் சமீப காலமாக தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டு புலம்பி வருகிறார். கூடிய சீக்கிரமே நடிகை கம்பேக் கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ரொம்ப ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

  English summary
  Popular actress weight gain moves her into a field out heroine. She is in deep trouble to get new movies for her survive in industry.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X