கூடவே நடிக்கிறதால.. இந்த விஷயத்துல அந்த நடிகை மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தவிக்கிறாராம்!
சென்னை: உச்ச நட்சத்திரத்தின் புதிய படத்தில் ரொம்ப வருஷம் கழிச்சு நடிக்கும் அந்த பிரபல நடிகையால தற்போது பூதாகரமாக வெடித்துள்ள அந்த விஷயத்தை பத்தி மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தவித்து வருகிறாராம்.
அதுவும் அரசியல் தொடர்பு கொண்ட அந்த நடிகையிடம் தொடர்ந்து நெட்டிசன்களும் இந்த விஷயம் தொடர்பாக டார்ச்சர் செய்து வருகின்றனர்.
அவங்களுக்கு நேரடியா பதில் சொல்ல முடியாம மறைமுகமாக அவர்களை திட்டியும் அந்த நடிகை கமெண்ட் செய்து வராங்க..

ஸ்டார்ட்
தெய்வீக நம்பிக்கையை துணையாகக் கொண்டு அரசியலில் களம் காணப் போவதாக அறிவித்துள்ள அந்த உச்ச நடிகர் அதற்கான வேலைகளை தொடங்கி விட்டார் என்றே தோன்றுகிறது.

அதுக்காகத்தான் இது
அதுக்கு இடையூறாக இருக்கிற நம்பிக்கை மற்றும் அதை சுற்றி நடக்கும் அரசியலில் கை வைத்தால் தான் நினைச்சதை நடத்த முடியும் என திட்டம் போட்டுள்ள அந்த உச்ச நடிகர் சரியான காயை நகர்த்தியுள்ளார் என்றே பேசிக்கிறாங்க..

கூட நடிக்கிறாங்க
இன்னமும் சினிமா குதிரையில் சவாரி செய்து வரும் அந்த உச்ச நடிகரின் புதிய படத்தில் ரொம்ப வருஷம் கழிச்சு அந்த பிரபல நடிகைக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அவங்களும் அரசியலில் இருக்கிறதால, இந்த விஷயத்துல என்ன பண்றதுன்னே அவங்களுக்கு தெரியலையாம்.

வம்பு இழுக்குறாங்க
ஆனால், அந்த நடிகையை சும்மா விடாமல், இந்த விஷயத்துல உங்களோட நிலைப்பாடு என்ன என கேட்டு அந்த நடிகையை நெட்டிசன்கள் குறிப்பாக அந்த கட்சிக்காரங்கள் வம்பிழுத்து வருகிறார்கள்.

சொல்ல முடியல
திடீரென பூதாகரமாக வெடித்துள்ள அந்த விஷயத்துல தன்னுடைய நிலைப்பாட்டை தைரியமாக சொல்ல முடியல. இந்த விஷயத்துல சொல்லாமல் இருந்தாலும் அவங்களோட அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என நினைத்து மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம கேள்வி கேட்கும் நெட்டிசன்களையே மடக்கி திட்டி தீர்த்து வராங்களாம்.


Click it and Unblock the Notifications











