சான்ஸே இல்லாமல் தவிக்கும் சமத்து பாப்பா.. வயதான நடிகருடன் ஜோடி போட்டு நடிக்கக் கூட ரெடியாம்?

By Staff

சென்னை: சமத்து பாப்பாவை நடிகர்கள் தொடர்ந்து கழட்டி விட்டு வரும் நிலையில், அந்த வாரிசு நடிகை ரூட்டை பிடிப்பது தான் இனிமேல் புத்திசாலித்தனம் என நினைத்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல நடிகரின் தம்பியாக நடித்தவரின் வாரிசுக்கு ஜோடியாக நடித்து விட்டு பெரியப்பா வயதில் இருக்கும் நடிகருடன் கூடிய சீக்கிரமே ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார் அந்த பிரபல நடிகை என அரசல் புரசலாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

Popular actress will soon join hands with Very old actor gossips trending

பாலிவுட் போறேன், ஹாலிவுட் போறேன் என கணவரை பிரிந்த நிலையில், பெரிய லட்சியத்துடன் புறப்பட்ட நடிகைக்கு திடீரென ஏற்பட்ட பிரச்சனை அவரை மொத்தமாக முடக்கி விட்டது.

கைவிட்ட பாலிவுட் நடிகர்: சமத்து நடிகை இனிமேல் நம்ம படத்தோட நடிகை என சந்தோஷத்தில் ரியாலிட்டி ஷோவில் நடிகையை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டு சுற்றி அதகளம் பண்ண அந்த ஃபிளாப் பாலிவுட் நடிகர் நடிகைக்கு ஏற்பட்ட பிரச்சனை எங்கே நமக்கும் வந்து விடப் போகுது என அஞ்சி நடுங்கி அதிரடியாக அந்த நடிகையை படத்தில் இருந்து தூக்க சொல்லி விட்டாராம்.

பொழப்பு போச்சு: பெரிதாக பட வாய்ப்புகள் குவியும் என நினைத்துக் கொண்டிருந்த நடிகைக்கு கடந்த ஆண்டு வெளியான படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்து மோசம் செய்த நிலையில், பொழப்பு மொத்தமாக போய் விட்டதாக கூறுகின்றனர். இனிமேல் தென்னிந்தியா பக்கம் திரும்பினாலும் நடிகர்கள் சீண்ட மாட்டார்களே என நினைத்துக் கொண்டிருந்த நடிகை திடீரென வாரிசு நடிகையை போல ரூட்டை மாற்ற முடிவு எடுத்து விட்டதாக கூறுகின்றனர்.

வயதான நடிகருடன் ஜோடி: காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை புரிந்துக் கொண்ட சமத்து பாப்பா தற்போது தாத்தா நடிகருடன் ஜோடி போட்டு நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய விரைவில் அந்த படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என தெரிகிறது. எப்படியோ நடிகைக்கு படம் கிடைத்து விட்டதே ஹேப்பி தான் என்றும் வித்தியாசமான படமாக வரும் என்றும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X