அந்த ரோல் கொடுத்தாலும் ஓகே.. என்ன இப்படி இறங்கிட்டாங்க அந்த பிரபல நடிகை.. ரொம்ப பாவம்!
சென்னை: திருமணத்திற்கு பிறகு அந்த ஸ்வீட் நடிகையின் மார்க்கெட் அதள பாதாளத்திற்கு சென்று விட்டதாம்.
ஏற்கனவே கமீட் ஆன அந்த பிரம்மாண்ட படம் இனி வருமா? வராதா? என்கிற ரீதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
புதிதாக படங்கள் குவியும் என நினைத்த அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக எந்தவொரு நடிகரும் தயாரிப்பாளரும் ஓகே சொல்ல மறுத்து வருவது தான் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

வயசாகிடுச்சு
பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வரும் அந்த பிரபல நடிகை பல ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி வந்தார். ஆனால், தற்போது அவருக்கு மிகவும் வயசான காரணத்தால் பெரிய ஹீரோக்கள் படத்தில் கூட ஒப்பந்தம் செய்ய யோசித்து வருகிறார்களாம்.

கல்யாணமாகிடுச்சு
கொரோனா லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பு ஏதும் இல்லாத காரணத்தால் சட்டென தொழிலதிபர் ஒருவரை உஷாராக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார் அந்த நடிகை. திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்று கூறிய அவர், தற்போது சினிமா வாய்ப்பு தேடி அலைந்து வருகிறாராம். திருமணம் ஆகி விட்டாலே அந்த நடிகையை சினிமாவில் மறைமுகமாக ஒதுக்கும் பழக்கம் கோலிவுட்டில் இன்னமும் நிலவி வருகிறதாம்.

மாஸ் நடிகர் படம்
நோலன் இயக்குநர் இயக்கத்தில் மாஸ் நடிகர் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அந்த பிளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் இருக்கும் என்றும், தன்னைத் தான் நாயகியாக போடுவார்கள் என்றும் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்த பிரபலத்துக்கு அந்த இயக்குநரையே அதிரடியாக மாஸ் நடிகர் மாற்றியது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

வில்லியாகவும் நடிக்க ரெடி
மேலும், இளம் இயக்குநருக்கு படத்தை கொடுத்த மாஸ் நடிகர் நாயகியாகவும் வேறு ஒருவரை களமிறக்கி உள்ள நிலையில், ஸ்வீட் நடிகை டோட்டல் அப்செட் ஆகிவிட்டாராம். இருந்தாலும், எப்படியாவது மாஸ் நடிகர் படத்தில் நடித்தாக வேண்டும் என்கிற நோக்கத்தில் நெகட்டிவ் ரோல் அல்லது வில்லி கதாபாத்திரத்தில் கூட தான் நடிக்க தயார் என்றும் ஓப்பனாக ரெக்வஸ்ட் விடுத்துள்ளார் என்று பரபரப்பான தகவல்கள் கோலிவுட்டில் வலம் வருகின்றன.

ரொம்ப பாவம்
அந்த பிரம்மாண்ட படம் மற்றும் பாலிவுட் ரீமேக் படம் எல்லாம் வெளியாகி இருந்தால், இந்த பிரபல நடிகையின் மார்க்கெட்டே வேற லெவல் உச்சத்திற்கு சென்றிருக்கும் என்றும், இப்போ அவர் நிலைமை இப்படி ஆகிடுச்சே, ரொம்ப பாவம் என திரைத் துறையில் இருக்கும் பலரும் அனுதாபப்பட்டு வருகின்றனராம்.


Click it and Unblock the Notifications