திரையுலகில் திடீரென கிளம்பிய எதிர்ப்பு.. நம்பர் நடிகை எடுத்த அதிரடி முடிவு.. கணவர் தான் காரணமா?
சென்னை: டாப் நடிகர் படத்தில் இருந்து கணவர் அதிரடியாக விலக்கப்பட்ட நிலையில், ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளாராம் நடிகை. மேலும், தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகையை ஓரங்கட்டும் வேலைகள் நடந்து வருவதால் அப்செட் ஆகி உள்ள அவர் அதிரடியாக அப்படியொரு முடிவை எடுக்கப் போவதாக பலமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் நடிகைகள் அதிகபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் சமாளிப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில், சில நடிகைகள் மட்டும் 20 ஆண்டுகள் கடந்தும் நம்பர் ஒன் நடிகைகளாக வலம் வருவதே பெரிய சாதனை தான்.
முன்னணி நடிகர்கள் உடன் ஜோடி போட்டு நடித்து வந்த அந்த நம்பர் நடிகை திருமண அறிவிப்பை அறிவித்ததில் இருந்தே பல நடிகர்கள் அவருடன் இனிமேல் நடித்தால் நல்லா இருக்கு என ஒதுங்கி வருகின்றனர்.

ஜோடியாக வேண்டாம்
இயக்குநருக்கு அந்த நம்பர் நடிகை மனைவியான நிலையில், பல முன்னணி நடிகர்களுடன் நடிகையுடன் இனிமேல் சகஜமாக டூயட் பாடியோ, கட்டிப் பிடித்து, முத்தம் கொடுப்பது போன்ற ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தால் நல்லா இருக்காது என ஒதுக்கி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த நடிகைக்கு பெரிய படங்கள் கிடைக்காமல் போனது மிகப்பெரிய இழப்பாக மாறி உள்ளது.

ஒதுக்கிய டாப் நடிகர்
நடிகையுடன் ஏற்கனவே இணைந்து ஹிட் கிடைத்த நிலையில், கணவர் படத்தில் எப்படியாவது மீண்டும் டாப் நடிகர் உடன் இணைந்து நடிக்கலாம் என நடிகை போட்ட திட்டமெல்லாம் கடைசி நேரத்தில் அவருக்கு மட்டுமின்றி அவரது கணவருக்கும் வில்லனாக முடியும் என யாருமே எதிர்பார்க்காத பல விஷயங்கள் அரங்கேறி விட்டன.

வீட்டுக்குள் வெடித்த சண்டை
உன்னால் தான் எனக்கு வாய்ப்பு போனது என்றும் எல்லாவற்றுக்கும் காரணம் நீ தான் என கணவரும் மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதமே வந்து விட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. சமீப காலமாக மனைவியுடன் ஜாலியாக இருக்கும் எந்தவொரு போஸ்ட்டை கூட கணவர் போடுவதில்லையாம்.

அதிரடி முடிவு
கையில் இருக்கும் சில படங்களை முடித்து விட்டு எந்தவொரு சர்ச்சையும் பிரச்சனையும் இல்லாமல் சினிமாவில் இருந்தே விலகி விடலாம் என்கிற முடிவுக்கே நம்பர் நடிகை தற்போது வந்து விட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி சினிமா துறையையே உலுக்கி உள்ளது.

நெகட்டிவிட்டி ஜாஸ்தியாகிடுச்சு
முன்பை போல ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் நிலையெல்லாம் இப்போது சினிமாவில் இல்லை என்றும், எப்போது யார் காலை வாரி விடுவார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு நெகட்டிவிட்டி ஜாஸ்தியாகிடுச்சு, அமைதியான வாழ்க்கையை வாழ ஆசைப்படுவது தான் நடிகை இந்த திடீர் முடிவு எடுக்க காரணம் என்கின்றனர்.

கணவரை காப்பாத்த
கைவசம் உள்ள சில படங்களை முடித்து விட்டு கடைசியாக கணவரை காப்பாத்த ஒரு படத்தில் மட்டும் நடிக்கலாம் என்கிற முடிவில் நடிகை இருப்பதாக பரபரப்பு பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருகின்றன. அந்த படத்திற்கு பிறகு தயாரிப்பு பணிகள் மற்றும் பிசினஸில் நடிகை கவனம் செலுத்த போவதாக கூறுகின்றனர். விரைவில் உண்மை வெளிவரும்.


Click it and Unblock the Notifications











