டைரக்டருடன் தயாரிப்பாளருக்கு ரகசிய காதல்?.. அக்கா திருமணத்தை தொடர்ந்து தங்கையும் சீக்கிரமே?

By Staff

சென்னை: அவசர அவசரமாக அக்கா திருமணம் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக தங்கையின் திருமணமும் அரங்கேறப் போவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. தங்கையின் ரகசிய காதல் குறித்து குடும்பத்துக்கு தெரிந்த நிலையில், தான் அக்காவின் திருமணத்தையே அவசர அவசரமாக செய்ததாகவும் பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

பிரபல நடிகையாக வலம் வந்த அந்த நடிகையின் மகள் தற்போது இயக்குநர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியான நிலையில், சில வீடியோக்கள் அதை உறுதி செய்யும் வகையில் வெளியாகி பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

Popular Actress Younger Daughter also fall in love with Director

திருமண விழாவில் தங்கை தனது ரகசிய காதலனுடன் செய்த சேட்டைகள் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் சூடான பஜ்ஜியாக மாறியுள்ளது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி: பாடி ஷேமிங் உள்ளிட்ட பல்வேறு கிண்டல்களுக்கு நடிகையும் அவரது மகள்களும் ஆளான நிலையில், தன்னை எப்படி அழகாக மாற்றினாரோ அந்த நடிகை அதே போல தனது மகள்களையும் மாற்றி அனைவரது வாய்களையும் அடைத்து விட்டார். மேலும், மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்த ஆசைப்பட்ட நிலையில், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தினார்.

அவசர அவசரமாக திருமணம்: மூத்த மகள் சினிமாவில் அறிமுகமாகப்போகிறார் என அறிவிப்புகள் வெளியான நிலையில், முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக திருமணத்தை முடித்து விட்டாரே என பலரும் ஏகப்பட்ட யூகங்களை கிளப்பினர். ஆனால், அனைத்துக்கும் காரணம் இளைய மகள் தான் என்று தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளன.

ரகசிய காதலருடன் அட்டகாசம்: நடிகையின் இளைய மகள் டைரக்டர் ஒருவருடன் நெருங்கி பழகி வருகிறார் என்றும் ரகசியமாக அவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. தங்கை திருமணத்துக்கு அவசரம் காட்டி வருவதாலே அக்காவின் திருமணம் அதிரடியாக நடத்தப்பட்டது என்றும் கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே தங்கையும் திருமணம் செய்யப் போகிறார் என்றும் மகள்களை நிம்மதியாக கரை சேர்த்து விட்ட சந்தோஷத்தில் நடிகை நிம்மதி பெருமூச்சு விடுவார் என்கின்றனர். அக்காவின் திருமணத்தில் தங்கை தனது காதலருடன் செய்த அட்டகாசங்களை சில பிரபலங்களே பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிட்டதாக தகவல்கள் லீக் ஆகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X