அக்காவை தொடர்ந்து அந்த இயக்குநரை தங்கையும் டார்ச்சர் பண்றாராம்.. எப்படி சிக்கியிருக்காரு பாருங்க!
சென்னை: இயக்குநராக இருந்து பல பிரபலங்களை வேலை வாங்கி வந்த அந்த இயக்குநர் வசமாக தற்போது வாரிசு நடிகைகளிடம் சிக்கி தவித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஏற்கனவே அக்காவுடன் இணைந்து இயக்குநர் நடித்த நிலையில், அவரது பெயர் டோட்டல் டேமேஜ் ஆகிவிட்டது என பேசிக் கொள்கின்றனர்.
இந்நிலையில், தங்கையும் அந்த இயக்குநரை தினமும் டார்ச்சர் செய்து வருகிறார் என தற்போது பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. பெரிய இடம் என்பதால் எந்தவித மறுப்பும் சொல்ல முடியாமல் இன்ப அவஸ்த்தையை அந்த இயக்குநர் அனுபவித்து வருவதாக கூறுகின்றனர்.

அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பிக்கும் பிஸியில் அந்த இயக்குநர் ஈடுபட்டு வரும் நிலையில், வாரிசு நடிகைகள் இருவருமே தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வருகிறார்களாம்.
கெட்டுப்போன பெயர்: கடைசியாக அந்த இயக்குநர் இயக்கிய படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றதாக கூறப்பட்டாலும் அந்த படத்தால் தனக்கு எந்தவொரு பயனும் இல்லை என்றும் தனது பெயர் தான் டோட்டல் டேமேஜ் ஆகிவிட்டதாக ரொம்பவே அந்த இயக்குநர் ஃபீல் செய்து வருகிறாராம். இந்நிலையில், எப்படியாவது அடுத்த படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்து தனது பெயரை மீண்டும் திருப்பிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல ஹாலிவுட் படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு எடிட் செய்து வேறு சீன்களாக மாற்றி வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.
அக்கா பண்ண இம்சை: அக்கா நடிகை பண்ண இம்சையால் இயக்குநருக்கு மேலும் தர்மசங்கடமான சூழல் நிலவி விட்டது என்கின்றனர். காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போல இயக்குநர் அந்த நடிகையுடன் நடிக்க அந்த நடிகையின் காதல் பிரேக்கப்புக்கே இவர் தான் காரணம் என பஞ்சாயத்து வெடிக்க ஆரம்பித்ததால் வெளியே தலைகாட்ட முடியாமல் வேலையில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் அந்த இயக்குநர் என்கின்றனர்.
தங்கச்சி டார்ச்சர்: இந்நிலையில், அக்காவுக்கு பண்ணது போல எனக்கும் ஒரு ஆல்பம் பண்ணிக் கொடு என்றும் அல்லது உன் படத்துல எனக்கு ஒரு கேரக்டர் உருவாக்கு என்றும் பட வாய்ப்புகளே இல்லாமல் பரிதாப நிலையில் இருக்கும் அந்த தங்கச்சி நடிகையும் தற்போது இயக்குநரை டார்ச்சர் செய்து வருவதாக கூறுகின்றனர். தனது உதவி இயக்குநர் படத்தில் தங்கை நடிகைக்கு வாய்ப்பு தரும் முடிவுக்கு தற்போது அந்த இயக்குநர் வந்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











