ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. சமத்து நடிகை ஆட்டம் போட்டதுக்கு பின்னணியில் இவ்ளோ விஷயம் இருக்கா?

By Staff

சென்னை: முதல்முறையாக கவர்ச்சிக் குத்தாட்டம் போட்டு சர்வதேச அளவில் டிரெண்டான சமத்து நடிகை சமீபத்தில் மாஸ் நடிகரின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு போட்ட நடனத்தால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காயை அடித்துள்ளாராம்.

விவாகரத்து பிரச்சனையையே மறக்கடிக்கும் வகையில் ஒரே ஒரு குத்தாட்டாத்தால் உலகளவில் ஃபேமஸ் ஆகிவிட்டார்.

சர்வதேச அளவில் பட வாய்ப்புகளும் அந்த நடிகைக்கு குவிந்து வருகிறது.

அவர் தான் டார்கெட்

அவர் தான் டார்கெட்

ஆனாலும், அந்த நடிகைக்கு மனதளவில் ஒரு பெரிய குறை இருக்கத்தான் செய்து வருகிறதாம். ஏற்கனவே மூன்று முறை அந்த மாஸ் நடிகருடன் இணைந்து நடித்த அவர் மீண்டும் ஒரு முறை அவருடன் இணைந்து நடிக்க தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், அதற்கு பெரிய தடையாக இன்னொரு நடிகை இருப்பது தான் சமத்து நடிகைக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

நடிகையுடன் சண்டை

நடிகையுடன் சண்டை

சமத்து நடிகைக்கும் கால் அழகி நடிகைக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வரும் நிலையில், அடுத்த படத்திற்கும் அந்த மாஸ் நடிகருடன் கால் அழகி நடிகையே கர்ச்சிப்பை போட்டு இடம்பிடித்து வைத்துள்ளது தான் சமத்து நடிகையை அப்செட் பண்ணி வந்தது. இந்நிலையில், ஒரே கல்லில் இரு மாங்காயை அடித்துள்ளாராம் சமத்து நடிகை.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்

விடுதலைப் பறவையான பின்னர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறி வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய கோட்டையையும் தான் பிடித்து விட வேண்டும் என்கிற முனைப்பு அவர் மனதில் முழு அளவில் இருந்து வருகிறது. பக்கத்து மாநில மொழி படத்தில் மாஸ் நடிகர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் கால் அழகியுடன் இணைந்து நடிக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ள சமத்து நடிகை அவருடன் சமாதானம் ஆகி உள்ளாராம்.

அதற்குத்தான் அந்த ஆட்டம்

அதற்குத்தான் அந்த ஆட்டம்

இதுவரை அந்த நடிகை நடனமாடிய பாடலுக்கு சமத்து நடிகை நடனம் ஆடியதே கிடையாது. இந்நிலையில், மாஸ் நடிகருடன் கால் அழகி நடிகை நடனமாடிய அந்த பாடலுக்கு நடனமாடி மாஸ் நடிகரை மட்டுமின்றி சண்டைக்கார நடிகையுடனும் சமாதானம் ஆகி ஒரே பந்தில் இரண்டு சிக்ஸர்களை விளாசி உள்ளார். கூடிய விரைவிலேயே அந்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

பாவம் விருது நடிகை

பாவம் விருது நடிகை

இந்த படத்தில் மாஸ் நடிகரை நடிக்க வைக்க பெரும் முயற்சி மேற்கொண்ட விருது நடிகைக்கு கடைசி நேரத்தில் மிஞ்சியது கண்ணீர் மட்டும் தான் என்கின்றனர். சமத்து நடிகை ஒரே ஒரு குத்தாட்டத்துக்கு வந்து செல்ல உள்ளார் என்றும் விருது நடிகையே இரண்டாவது ஜோடி என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வந்து அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X