பாட்டு நடிகையின் வருகையால் படமே இல்லாமல் தவிக்கும் வாரிசு நடிகை.. குடியே கதியென இருக்காராம்?

By Staff

மும்பை: பாலிவுட்டில் தென்னிந்திய படங்களை ரீமேக் செய்தாலே ஹிட் ஆகிறது என்பதற்காக ஏகப்பட்ட படங்கள் உருவாகின. அதே போல தென்னிந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலரையும் பாலிவுட்டுக்கு அழைத்து வந்து தங்களது பிசினஸை பான் இந்தியா அளவுக்கு கொண்டு செல்ல போராடி வருகின்றனர்.

அதில், குறிப்பாக பாட்டு நடிகைக்கு மிகப்பெரிய அளவில் பாலிவுட்டில் கிரேஸ் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. கிரஷ் நடிகைக்கு பிறகு பாட்டு நடிகைக்குத் தான் ரசிகர்கள் அதிகமாம்.

Popular Bollywood Actor daughter lost her all new movies due to South Actress entry
Photo Credit:

ஆனால், அவரது வருகை பாலிவுட்டில் சில இளம் கவர்ச்சி நடிகைகளின் பட வாய்ப்புகளை ஒட்டுமொத்தமாக பிடுங்கி விட்டதாக பஞ்சாயத்துக்கள் கிளம்பி உள்ளன.

அதிகளவு நெப்போடிசம்: உலகம் முழுவதும் வாரிசு அரசியல், சினிமாவில் வாரிசுகளின் படையெடுப்பு இருந்தாலும், பாலிவுட்டில் அவுட்சைடர்களை உள்ளே விடாத அளவுக்கு நெப்போடிசம் தலைவிரித்து ஆடி வருகிறது. ஆனால், அதன் காரணமாகவே நல்ல திறமையானவர்களை அடையாளம் காட்ட முடியாமல் நடிக்கவே தெரியாத நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாய்ப்புகளை கொடுத்ததன் விளைவாக டோலிவுட்டுக்கு பின்னாடி போகும் அளவுக்கு பாலிவுட் நிலைமை மோசமாகி விட்டது என்கின்றனர்.

பாட்டு நடிகையின் வருகையால்: பாலிவுட்டில் பாட்டு நடிகையின் வருகை பல இளம் நடிகைகளின் ஸ்டார் அந்தஸ்த்தை பிடுங்கிக் கொண்டு நீங்க எல்லாம் நடிக்கவே லாயக்கில்லை என்கிற நிலைக்கு தள்ளிவிட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பல தென்னிந்திய நடிகைகளுக்கு பாலிவுட் நடிகர்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் தான் வாரிசு நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அதிரடியாக குறைந்து விட்டது என்கின்றனர். அதிலும், ஒரு குறிப்பிட்ட பிரபலத்தின் வாரிசுக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் பறிபோக காரணமே அந்த பாட்டு நடிகைதான் என்கின்றனர்.

குடியே கதி: பட வாய்ப்புகள் அதிரடியாக குறைந்த நிலையில், நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் ஆரம்பத்தில் மாலத்தீவு, பாங்காக் என ஃபாரீன் டூர் அடித்து வந்தாராம். ஆனால், மறுபடியும் மும்பைக்கு வந்ததும் ஷூட்டிங் இல்லாத நிலையை அறிந்து செம டென்ஷனாகி குடிக்கத் தொடங்கிய நடிகை தொடர்ந்து குடியே கதியென அதற்கு அடிமையாகி விட்டார் என்கின்றனர். நடிகையின் தந்தை ரொம்பவே கவலைப்படுவதாகவும் பாட்டு நடிகைக்கு எதிரான பிஆர் வேலைகளிலும் அவர் களமிறங்கியுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X