இதெல்லாம் தேவையில்லாத ஆணி.. உங்களுக்கு வந்தா ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா?

By Staff

சென்னை: சினிமா நடிகர்களுக்கு ஏதாவது சிக்கல் வந்தால் தான் உடனடியாக மக்கள் ஞாபகம் வந்துவிடும் என்றும் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த ரூட்டை தேர்வு செய்கின்றனர் என்கிற குற்றச்சாட்டுக்கு மாஸ் நடிகரும் ஆளாகி உள்ளார்.

ஆரம்பத்தில் அந்த துறை எல்லாம் தனக்கு செட்டே ஆகாது என பம்மிக் கொண்டிருந்த நடிகருக்கு தொடர்ந்து சினிமாவில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகத்தான் மாற்று சக்தி என மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.

Popular Celebrity adviced Mass Actor don t do targetting Young Actor
Photo Credit:

இந்நிலையில், அதே நெருக்கடியை தமாஸ் நடிகருக்கு நீங்க கொடுக்கலாமா? என பெரிய சினிமா பிரபலம் ஒருவரே கேட்டு விளாசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமாஸ் நடிகர் தான் டார்கெட்: மாஸ் நடிகருக்கு எதிராக தமாஸ் நடிகரை கொம்பு சீவி விட்ட நிலையில், தெரியாத்தனமாக அதில் ஆடு போல தலையை விட்டு தமாஸ் நடிகர் தொடர்ந்து தர்ம அடி வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்நிலையில், உங்களுக்கு எதிராகவே அவன் எப்படி களம் இறங்கலாம் என மாஸ் நடிகரிடம் சிண்டு முடிந்து விட அவரும் என்னமோ பண்ணிக்கோங்க என தலையை ஆட்ட தமாஸ் நடிகரை கட்டம் கட்டி விட்டனர் என அவரே மேடையில் கதறும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

தக்காளி சட்னியா?: உங்களை டார்கெட் செய்து கார்னர் பண்றாங்க என்பதற்காகத்தானே ரூட்டையே மாத்துனீங்க, இப்போ அதே தவறை நீங்க தமாஸ் நடிகருக்கு செய்யலாமா? என பிரபலம் ஒருவர் மாஸ் நடிகரிடமே டைரக்ட்டாக கேள்வி எழுப்பி விட்டார் என பரபரப்பான கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

படத்துக்கு வேட்டு: ஏற்கனவே தமாஸ் நடிகரின் படங்கள் டல்லடிக்க ஆரம்பித்த நிலையில், அவர் தயாரிப்பில் வெளியாகவுள்ள படத்துக்கு எதிராகவும் வேட்டு வைக்க மாஸ் நடிகரின் படை ரெடியாக இருப்பதாக வெளியான தகவலை அடுத்து இருவருக்கும் வேண்டப்பட்ட நபர் ஒருவர் தூது சென்றுள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. இப்படியே நிலைமை போனால், அடுத்து மாஸ் நடிகரை எதிர்த்து தமாஸ் நடிகரும் அந்த களத்தில் குதித்து விடுவார் என்றும் அலர்ட் செய்துவிட்டு வந்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X