அந்த வேலையை மட்டும் பண்ணாத.. திடீரென நடிகைக்கு வந்த போன் கால்.. பிரம்மாண்ட கச்சேரியை கெடுக்க பிளான்?
சென்னை: மாஸ் நடிகரின் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்கப் போவதாக தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பிரபல நடிகை ஒருவருக்கும் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், பெரும்புள்ளி ஒருவர் குறிப்பிட்ட அந்த பிரபல நடிகையை நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என தடுத்து இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
எப்படியாவது தனது ரசிகர்களுக்கான நிகழ்ச்சியாக பிரமாண்டமாக ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி விட மாஸ் நடிகர் ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஆனால், அதே சமயம் அந்த நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்தக் கூடாது என்பதற்கான சதி வேளைகளும் அரங்கேறி வருவதாக கூறுகின்றனர்.

பிரபல நடிகை உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்களுக்கு சினிமா பிரபலம் மூலமாகவே நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்கிற கோரிக்கை எழுந்திருப்பதாக ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.
பெரும் புள்ளிக்கு நெருக்கம்: அந்த அரசியல் பிரபலத்துக்கும் அந்த நடிகைக்கும் ரொம்பவே நெருக்கமான ஒரு சினிமா பிரபலத்தை அணுகித்தான் இந்த வேலையை கச்சிதமாக செய்ய பெரும் புள்ளி ஒருவர் பக்காவாக திட்டமிட்டுள்ளார் என்று கூறுகின்றனர். ஆரம்பத்தில் அந்த சினிமா பிரபலம் என்னையெல்லாம் இதில் இழுத்து விடாதீங்க பாஸ் என்று சொன்னாலும், நீங்க சொன்னால் தான் அந்த நடிகை கேட்பாங்க என அவரை பிரைன் வாஷ் பண்ண வேறு வழியில்லாமல் அந்த பிரபலமும் நடிகைக்கு போன் போட்டு பேசிவிட்டார் என்கின்றனர்.
கச்சேரியை கெடுக்கணும்: மாஸ் நடிகரின் பிரமாண்ட கச்சேரி நிகழ்ச்சி எப்படியும் வெற்றிகரமாக நடக்கக் கூடாது என்றும் அதிலும் அவர் கோடிக்கணக்கில் பிசினஸ் தான் பார்க்கின்றார் உள்ளிட்ட தகவல்களை சோஷியல் மீடியாவில் பரப்புவது மற்றும் நிகழ்ச்சிக்கு செல்லும் சினிமா பிரபலங்களை போக விடாமல் தடுப்பது உள்ளிட்ட வேலைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகையின் முடிவு என்ன?: நடிகைக்கு ரொம்பவே வேண்டப்பட்ட சினிமா பிரபலம் திடீரென அட்வைஸ் கொடுப்பது போல அந்த கச்சேரிக்கு செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளாராம். அதை கேட்ட நடிகை நான் வரேன்னு கமிட் பண்ணிட்டேன்னே என்றும் போகவில்லை என்றால் தப்பாகி விடும் எனக் கூற, நடிகையிடம் தொடர்ந்து பேசி அவரை போக விடாமல் செய்வதற்கான வேலையை அந்த சினிமா பிரபலம் பார்த்துள்ளார் என்றும் நடிகை கடைசியாக என்ன முடிவு எடுத்துள்ளார் என்பதும் நிகழ்ச்சிக்கு போவாரா மாட்டாரா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











