For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கதையை மட்டுமல்ல டைட்டிலையும் காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா.. காப்பி இயக்குநரை கலாய்த்த பிரபலம்

    By Staff
    |

    சென்னை: காப்பி இயக்குநர் அடுத்ததாக பாலிவுட் ஹீரோவை வைத்து பெரிய பட்ஜெட் படத்தை இயக்க உள்ளார் அல்லவா? அந்த படத்தின் டைட்டில் கசிய நெட்டிசன்கள் மற்றும் சில பிரபலங்களும் ஓப்பனாகவே அந்த இயக்குநரை கலாய்த்து தள்ளி உள்ளார்களாம்.

    கூட்டாஞ்சோறு ஆக்குவது போல தான் பார்த்த பல படங்களில் இருந்தும் ஒவ்வொரு காட்சியாக உருவி அந்த இயக்குநர் இதுவரை படங்களை இயக்கி அதனை ஹிட்டும் ஆக்கி உள்ளதாக தொடர்ந்து அவரை பலரும் கலாய்த்து வருகின்றனர்.

    யார் என்ன சொன்னாலும், தனக்கு வருவதை தானே பண்ண முடியும் என எடுத்து வரும் அந்த இயக்குநருக்கு அடுத்ததாக ஒரு பெரிய சவாலே காத்துக் கொண்டிருக்கிறது.

    ஹீரோ அவதாரம் எடுத்த ஹரிஷ் உத்தமன்.. அஷ்வமித்ராவில் என்னம்மா நடிச்சிருக்காரு மனுஷன்!ஹீரோ அவதாரம் எடுத்த ஹரிஷ் உத்தமன்.. அஷ்வமித்ராவில் என்னம்மா நடிச்சிருக்காரு மனுஷன்!

    பிரம்மாண்டத்தின் சிஷ்யன்

    பிரம்மாண்டத்தின் சிஷ்யன்

    இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்னரே பிரம்மாண்டத்தின் சிஷ்யனாக பணியாற்றியவர் தான் அந்த காப்பி இயக்குநர். மேலும், பிரம்மாண்டத்திற்கே பிசினஸ் ரீதியாக ஏகப்பட்ட ஐடியாக்களை சொல்லிக் கொடுத்துத் தான் உலகளவிலான மார்க்கெட்டை அவரால் பிடிக்க முடிந்ததாகவும் பல தகவல்கள் பரவி வருகின்றன.

    எல்லாமே ஹிட்

    எல்லாமே ஹிட்

    காப்பி இயக்குநர் என்று பெயர் எடுத்தாலும் இதுவரை அந்த இளம் இயக்குநர் எடுத்த எல்லா படங்களுமே வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன என்பது தான் நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம் என்கிற உண்மை. வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டாலும் தனது வசூல் வேட்டை மூலம் அடுத்தடுத்த உயரத்திற்கு சென்று கொண்டே இருக்கும் அந்த இயக்குநர் அடுத்ததாக பாலிவுட்டின் பெரிய நடிகரை வைத்து படம் இயக்க உள்ளார்.

    நீண்ட நாள் காத்திருப்பு

    நீண்ட நாள் காத்திருப்பு

    அந்த நடிகருடன் படம் பண்ணுவதற்காக சில ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார் அந்த இயக்குநர். விரைவில் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், படத்தின் டைட்டில் கசிந்து விட்டதாக சில ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    என்ன டைட்டில்

    என்ன டைட்டில்

    காட்டு ராஜா டைட்டிலை பாலிவுட் ராஜாவுக்கு காப்பி இயக்குநர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அந்த டைட்டில் குறித்து வழக்கம் போல ஏகப்பட்ட ட்ரோல்களும், கலாய்த்து கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

    டைட்டிலே காப்பி

    டைட்டிலே காப்பி

    அதே டைட்டிலில் ஏற்கனவே பல மொழிகளில் பல படங்கள் வெளியாகி உள்ள நிலையில், பாலிவுட் ராஜாவுக்கு அந்த டைட்டில் பொருந்தினாலும் ஏன் பழைய டைட்டிலேயே வைக்கிறார் என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. மேலும், கதையை மட்டுமல்ல டைட்டிலையும் அவர் காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டார் என பிரபலம் ஒருவர் கமெண்ட் அடித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

    யார் அந்த பிரபலம்

    யார் அந்த பிரபலம்

    காட்டு ராஜாவின் பெயரில் கோலிவுட்டில் எடுத்த அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த காமெடி நடிகர் தான் அந்த காப்பி இயக்குநர் குறித்து இப்படியொரு வெளிப்படையான கமெண்ட்டை அடித்து கோடம்பாக்கத்தையே சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளாராம்.

    பழைய கதை

    பழைய கதை

    ஏற்கனவே காப்பி இயக்குநர் பாலிவுட் ராஜாவுக்கு பண்ணும் படத்தின் கதை பழைய போலீஸ் நடிகரின் கதை தான் என்கிற தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த போலீஸ் நடிகரின் அத்தனை படங்களையும் கரைத்து குடித்து விட்டே சினிமாவுக்கு வந்த காப்பி இயக்குநர் தொடர்ந்து அவரது படங்களையே காப்பி அடித்து புதிய படங்களாக பெயின்ட் அடித்து வியாபாரம் செய்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகளையும் பலர் முன் வைத்து வருகின்றனர்.

    English summary
    Popular celebrity criticize Copy Cat director’s next film title also copied from the popular action packed cop film title.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X