தோழியின் தாலியை பறித்த நடிகைக்கு நேர்ந்த கதி தான் உனக்கும்.. பிரபல நடிகைக்கு கணவரின் மாஜி சாபம்?
சென்னை: சினிமா என்பது முழுக்க முழுக்க நடிப்புத் தொழில் மட்டுமே என்று சொன்னாலும் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை அதில் ஏகப்பட்ட கள்ளக்காதல் கதைகள் அரங்கேறிக் கொண்டிருப்பதை கண்முன்னே பார்த்து வருகிறோம்.
மனைவியின் டார்ச்சர் தாங்கமுடியாமல் தான் இன்னொரு நடிகையை தேடிச் செல்கிறோம் என சில ஹீரோக்களே புலம்பத் தொடங்கிவிட்டனர். தங்களையும் தங்களது குழந்தைகளையும் தவிக்கவிட்டு இன்னொருத்தி கேட்குதா என மனைவிமார்களும் விளாசத் தொடங்கி விட்டனர்.

நன்றாக பழகியே தோழிக்கே வேட்டு வைத்து விட்டு அவரது கணவரை திருமணம் செய்துக் கொண்ட நடிகை தற்போது விவாகரத்து பெற்றது பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், பிரபலத்தின் மாஜி மனைவி உனக்கும் இதே கதிதான் என பிரபல நடிகைக்கு சாபம் விட்டுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி பரபரப்பை கேஸ் சிலிண்டர் இல்லாமலே பற்ற வைத்துள்ளன.
மனைவியின் சாபம் சும்மா விடாது: ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணை ஜாலியாக திருமணம் செய்துக் கொண்டோ அல்லது திருமணத்தை மீறிய உறவில் இருந்தாலும் அந்த பாதிக்கப்பட்ட மனைவியின் சாபம் சும்மாவே விடாது எனக் கூறுகின்றனர். தோழியின் தாலியை பறித்த நடிகைக்கும் அதே கதிதான் நேர்ந்துள்ளது என சமீபத்தில் வெளியான விவாகரத்து செய்தியை பார்த்து பிரபலத்தின் மாஜி மனைவி தனது கணவர் தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு நடிகையுடன் சென்ற நிலையில், அவரும் நிம்மதியாக இருக்கமாட்டார் என சபித்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகையின் கன்ட்ரோலில்: அந்த பிரபலம் தனது முதல் மனைவியை விடுத்து 2வதாக நடிகையுடன் சுற்றி வரும் நிலையில், ஒட்டுமொத்த கன்ட்ரோலும் நடிகையிடம் தான் உள்ளதாம். இத்தனை ஆண்டுகள் தனது மனைவியை தன்னால் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. ஆனால், இந்த நடிகை ஏன் நம்ம பேச்சைக் கேட்பதே இல்லை என்கிற எண்ணமும் நடிகருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புத்திக்கு எட்ட ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர்.
சீக்கிரமே வெடிக்கும்: அந்த பிரபலத்துக்கும் நடிகைக்கும் இடையே இப்போதே சில பிரச்னைகள் உருவாகத் தொடங்கியதாக தகவல்கள் கசிந்த நிலையில் தான் பிரபலத்தின் மாஜி இப்படியொரு சாபத்தை விட்டுள்ளார் என்று கூறுகின்றனர். சீக்கிரமே இருவருக்கும் இடையே சண்டை வெடிக்கும் என்றும் தான் பட்ட மனவேதனையை இருவரும் அடைவார்கள் என சாபம் விட்டுள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











