எல்லாமே பக்காவா பிளான் பண்ணிட்டு நடிகைக்காக காத்திருந்த இளம் புயல்.. கடைசியில் நடிகை பண்ண சம்பவம்!

By Staff

சென்னை: காந்த கண்ணழகி நடிகைக்காக ரொம்பவே ஆசை ஆசையாக இளம் புயல் பண்ணி வைத்திருந்த ஏற்பாடுகள் எல்லாமே கடைசி நேரத்தில் அவர் உஷாராகி வரமறுத்த நிலையில், வீணாகி போனதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

தமாஸ் நடிகரை போல தொடர்ந்து நல்ல நல்ல லட்டு ஹீரோயின்களாக புக் செய்து அவர்கள் மூலம் டிரெண்டாக தொடங்கிய இளம் புயல் கண்ணில் அந்த காந்த கண்ணழகியும் பட்டு விட்டாராம். இப்போதைக்கு இவர் தான் டிரெண்ட் என்றும் இவருடன் ஒரு கூட்டணியை போட்டாலே அடுத்த வெற்றியை ருசித்து விடலாம் என நினைத்த இளம் புயல் அவருடனும் கூட்டணியை அமைத்து விட்டார்.

Popular celebrity getting big nosecut from an actresss talks going viral in cinema circle
Photo Credit:

ஷூட்டிங் நேரத்திலேயே இளம் புயல் பண்ண அலம்பலை பார்த்து கடுப்பாகி விட்டாராம் அம்மணி. ஆனால், அட்வான்ஸ் உடன் சென்றால் நல்லா இருக்காதே முழு பேட்டாவையும் வாங்கிட வேண்டும் என்பதற்காக சொன்னதெல்லாம் செஞ்சுவிட்டு கிளம்பியிருக்கிறார்.

பக்கா பிளான் போட்ட இளம் புயல்: எப்படியும் நடிகையுடன் இன்னொரு கூட்டணியை அமைத்து நெருங்கி விட வேண்டும் என பக்காவாக பிளான் போட்டு இளம் புயல் ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து மாப்பிள்ளை கணக்காக ரெடியாகி நிற்க, கடைசியில் இளம் புயலுக்கு அந்த நடிகை அல்வா கொடுத்து அவர் கனவில் ஒட்டுமொத்தமாக மண்ணை அள்ளி போட்டு விட்டார் என்கின்றனர்.

அல்வா கொடுத்த ஹீரோயின்: ஷூட்டிங் சமயத்திலேயே இளம் புயல் ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொண்டதை பார்த்து கடுப்பாகி விட்டாராம் அந்த நடிகை. ஆனால், வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்தால் நல்லா இருக்காது என நினைத்த அவர் அப்போது அமைதி காத்துவிட்டு தனது காரியத்தில் கண்ணாக இருந்துள்ளார் என்கின்றனர். ஆனால், மீண்டும் நடிகைக்காக வலை விரித்த புயலின் புத்தியை அறிந்துக் கொண்ட நடிகை செவலை தாவுடா தாவு என தாவி எஸ்கேப் ஆகிவிட்டார் என்கின்றார்.

கோபத்தைக்கொட்டிய புயல்: இளம் புயலின் அனைத்து ஏற்பாடுகளையும் அந்த காந்த கண்ணழகி கற்பூரம் போல கொளுத்தி ஊதி தள்ளிவிட்ட நிலையில், டென்ஷனான புயல் தனது கோபத்தை எல்லாம் போன் போட்டு கொட்டித் தீர்த்து விட்டார் என்கின்றனர். ஆனால், நடிகைக்கு கிடைத்த தகவல் படி புயலின் வலைக்குள் சிக்காமல் பிழைத்ததே மேல் என நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X