அந்த பிசினஸே போயிடும்.. பயத்தில் நடிகைகள்.. அடிமடியிலேயே கை வச்சா எப்படி?.. பிரபலம் நறுக்!
சென்னை: சினிமாவை தாண்டி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகைகள் கவர்ச்சி போட்டோக்களையும் பிகினி போட்டோக்களையும் பதிவிட்டு கல்லா கட்டி வந்த நிலையில், நடிகைகளின் பழைய போட்டோக்களே போதும், அதை வைத்து அவர்கள் செலவு செய்து நடத்தும் போட்டோஷூட்டை விட அல்ட்ரா கிளாமர் மற்றும் ஆபாசத்துடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி சில நெட்டிசன்கள் நடிகைகளை விட அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.
ஒரு காலத்தில் ஐட்டம் டான்ஸர்களை எப்படி ஹீரோயின்கள், நாங்களே ஐட்டம் டான்ஸ் ஆடுகிறோம் என காணாமல் போக செய்தார்களோ, அதே போல இப்போ புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகளை எப்படி எல்லாம் பார்த்து ரசிக்க வேண்டுமோ அப்படியெல்லாம் உருவாக்கி புது இன்ஸ்டாகிராம் பிசினஸ் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதாக பிரபலம் ஒருவர் பகீர் கிளப்பி உள்ளார்.

அதன் காரணமாகத்தான் நடிகைகள் தற்போது திடீரென தங்களின் ஃபாலோயர்கள் எல்லாம் சரசரவென குறைந்து வருவதை அறிந்து தான் அலறியடித்துக் கொண்டு பொங்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அந்த பிரபலம் பொளந்துக் கட்டியுள்ளார்.
எது நிஜம்.. எது பொய்: இப்பவே எது நிஜம்.. எது பொய் என கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு பல ஃபேக் எடிட்கள் நடிகைகளின் தத்ரூப போட்டோஷூட் புகைப்படங்கள் போலவே வெளியாகி வரும் நிலையில், அதற்கு பின்னணியில் பெரிய இன்ஸ்டாகிராம் பிசினஸே நடைபெற்று வரும் தகவல்கள் தான் தற்போது நடிகைகளை அலற அடித்து இருப்பதாக கூறுகின்றனர். மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள், ஆயிரக் கணக்கில் லைக்ஸ் என நடிகைகள் போடும் ஒவ்வொரு கவர்ச்சி போட்டோவுக்கும் அவர்களுக்கு கணிசமான தொகை கிடைத்து வந்த நிலையில், அந்த வருமானம் எல்லாம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அடிமடியிலேயே கை: சினிமா வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்றால் கூட, இன்ஸ்டாகிராமில் சப்ஸ்க்ரிப்ஷன் முறையில் நடிகைகள் பலர் பிகினி போட்டோக்களையும் எல்லை மீறிய கிளாமர் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களிடம் இருந்து பணத்தை சம்பாதித்து வந்த நிலையில், தற்போது அதே வேலையை டெக்னாலஜி தெரிந்த நெட்டிசன்கள் அடிமடியிலேயே கை வைத்து கறக்கத் தொடங்கி விட்டனர்.
பஞ்சாயத்து வெடிக்கும்: பிரபல பாலிவுட் நடிகையின் கணவரே நடிகைகளின் ஆபாச வீடியோக்களை வெளிநாட்டினருக்கு விற்றதை போல இந்த ஃபேக் எடிட் மூலமாக ஏகப்பட்ட நடிகைகளின் புகைப்படங்களும் வீடியோக்களும் ஆபாச வெப்சைட்டுகளில் வைரலாக ஆரம்பித்துள்ளன. கண்டிப்பாக இதனை தடுக்க பெரிய பஞ்சாயத்தே வெடிக்கும் என்றும் அந்த பிரபலம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











