பலூனை பார்த்து ஊதுங்க கோபால்.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது.. பிரைட் நடிகருக்கு பிரபலம் அட்வைஸ்!
சென்னை: பில்டப் விடுறதாக இருந்தாலும், பீலா விடுறதாக இருந்தாலும் மற்றவர்களை வைத்தே பண்ணுங்க, நீங்களே முன்னாடி நின்று ஓவர் பில்டப் கொடுக்காதீங்க, சப்போஸ் அது சறுக்கி விட்டது என்றால் எல்லாரும் உங்களை போட்டுத்தான் கலாய்ப்பாங்க, ஏற்கனவே அந்த டபுள் ரோல் படத்துக்கும் இதே நிலைமை தான் ஆனது உஷாராக இருங்க என பிரபலம் ஒருவரே பிரைட் நடிகருக்கு அட்வைஸ் கொடுத்திருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஓவர் பில்டப்புடன் வந்த படங்கள் எல்லாம் உதைவாங்க சைலன்ட்டாக எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான படங்கள் எல்லாம் பல மடங்கு லாபத்தை அள்ளி மாஸ் காட்டியுள்ளன.

இந்த ஆண்டின் கடைசி பிரம்மாஸ்திரம் போல சித்தரிக்கப்பட்டு வரும் அந்த ஃபயர் படத்தில் பெரிதாக எந்தவொரு ஃபயரும் இல்லை என இன்சைட் ரிப்போர்ட்டுகள் சொல்வதையும் அறிந்தே அந்த பிரபலம் பிரைட் நடிகரை எச்சரித்துள்ளாராம்.
பிரபலம் கொடுத்த அட்வைஸ்: பிரைட் நடிகரின் படத்துக்கு இன்சைட் ரிப்போர்ட்ஸ் கலவையான விமர்சனங்களாகவே வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படமே சரியாக புரியவில்லை என்றும் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதாகவும் வெளியான தகவலை அறிந்த நடிகருக்கு ரொம்பவே வேண்டப்பட்ட பிரபலம் ஒருவர் தான் முடிந்தவரை முட்டுக் கொடுத்தாச்சு ஓவராக போனால் எல்லாமே அடிவாங்கும் என்று நிதானப்படுத்த சொல்லியிருப்பதாக பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருகின்றன.
ஒரு முடிவோடு: ஆனால், பிரைட் நடிகர் இந்த முறை ஒரு முடிவோடு தான் உள்ளாராம். எந்தளவுக்கு ஹைப் ஏற்றுகிறோமோ ஏற்றுவோம். அப்போதுதான் பெருசா வரவில்லை என்றாலும் ஓரளவுக்கு வந்தாலே போட்டது கிடைத்து விடும் என்கிற பக்கா பிளானில் தான் எல்லாத்தையும் செய்து வருகிறேன் என அட்வைஸ் செய்தவருக்கே தனது ஸ்ட்ராட்டஜியை சொல்ல அந்த பிரபலமே ஆடிப் போய்விட்டார் என்கின்றனர்.
சொதப்பிச்சுன்னா சோலிமுடிஞ்சிடும்: ரசிகர்கள் முன்பு போல எல்லாம் ஏமாளிகளாக இல்லை என்றும் நல்ல படத்தை எத்தனை வாரம் ஆனாலும் தியேட்டருக்குச் சென்று பார்க்க தயாராக உள்ளனர். ஆனால், அதுவே நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தால், பொறுமையாக ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து உஷாராகவே உள்ளனர். இந்த படம் சொதப்பிவிட்டால் சோலி முடிந்து விடும் என்றும் கூறி வருகின்றனர். ஆனால், போட்ட காசுக்கு நிச்சயம் பங்கம் வராது என்பதால் பிரைட் நடிகரும் தயாரிப்பு தரப்பும் ஹேப்பி தானாம்.


Click it and Unblock the Notifications











