பழைய காதலியை இதிலும் ஃபாலோ பண்றாரா? விரல் நடிகரிடம் வம்பு பண்ண பிரபலம்!
சென்னை: விரல் நடிகருக்கு பல ஆண்டுகள் கழித்து கிடைத்த முதல் வெற்றியை கூட கொண்டாட முடியாத அளவுக்கு மனுஷன் பிசியாகி உள்ளது கோடம்பாக்கத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தயாரிப்பாளர் தரப்பு மீது அப்பா நடிகருக்கு ஏற்பட்ட கோபம் தான் இந்த நிகழ்ச்சியில் அந்த ஹீரோ பங்கு பெறாததற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஆனால், சினிமா பிரபலம் ஒருவரோ பழைய காதலியின் பாணியை காப்பி அடிக்கிறார் என ரொம்பவே நக்கலாக விழாவில் ஆஃப் தி ரெக்கார்டாக பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

வெற்றி விழா
விரல் நடிகரின் படம் நீண்ட ஆண்டுகளுக்கு படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பிரம்மாண்ட வெற்றி விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அந்த விழாவில் வெற்றி நாயகன் ஆன ஹீரோவே கலந்து கொள்ளாதது தான் அனைவருக்கும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்பா நடிகர் விளாசல்
விரல் நடிகரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாஸ் நடிகரின் அப்பா நடிகர் விரல் நடிகர் இப்படியொரு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து வெளிப்படையாகவே விமர்சித்துள்ளது மிகப்பெரிய சர்ச்சையை கோடம்பாகத்தில் கிளப்பி இருக்கிறது.

அந்த பிரச்சனை
ஆரம்பத்தில் படம் ரிலீசானதும் தயாரிப்பு தரப்பிடம் மிகவும் நெருக்கமாக இருந்த விரல் நடிகர் ரீமேக் உரிமை தொடர்பாக எழுந்த பிரச்சனை காரணமாக விரல் நடிகரின் அப்பா வழக்கு தொடர தயாரிப்பு தரப்புக்கும் ஹீரோ தரப்புக்கும் பிரச்சனை முற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பழைய காதலி
மேலும், விரல் நடிகரின் பழைய காதலியான நம்பர் நடிகையை இந்த விஷயத்திலும் ஒருவேளை காப்பி அடிக்கிறாரோ என சினிமா பிரபலம் ஒருவர் மேடையில் ஆஃப் தி ரெக்கார்டாக பேசியது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பட புரமோஷன்களை அந்த நடிகை தவிர்த்து வரும் ரூட்டை விரல் நடிகரும் தொடர போகிறாரா என்கிற யூகங்களும் கிளம்பி உள்ளன.

நம்பரை விடுறதில்லை
முன்னாள் காதலியை மறக்க முடியாமலே தொடர்ந்து விரல் நடிகர் தனது படத்தின் அனைத்து அறிவிப்புகளையும் அதே நம்பர் வருவது போல பார்த்து கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில், வெற்றி விழாவில் நாயகன் கலந்து கொள்ளாத நிலையிலும் அந்த நடிகையின் பெயர் இங்கேயும் அடிபட்டு இருப்பது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











