ஜாயின்ட் நடிகர் நிஜமாவே பலே கில்லாடி தான்.. இப்படியொரு ரூட் போட்டு வேலையை பார்க்குறாரே!
சென்னை: மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வரும் ஜாயின்ட் நடிகர் கைவசம் பல படங்களை வைத்திருப்பதற்கு பின்னணியில் இப்படியொரு காரணம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சோலோ ஹீரோவாக அந்த நடிகர் நடித்து வரும் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடாமல் சொதப்பி வரும் நிலையில், அவர் ஜாயின்ட் அடித்து நடித்து வரும் படங்கள் எல்லாம் பெரிய ஹிட் அடித்து வருகின்றன.
ஆனாலும், அவர் செய்யும் ஒரு விஷயம் காரணமாகத்தான் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

கைவசம் பல படங்கள்: தனியாக ஹீரோவாக நடிக்கும் படங்கள் எல்லாம் முதல் ஷோவுக்கு பிறகே ஈயாட ஆரம்பித்துள்ள நிலையிலும், ஜாயின்ட் நடிகர் கைவசம் பல படங்கள் குவிந்து வர காரணமே அவர் நடந்துக் கொள்ளும் விதம் தான் என்கின்றனர். தயாரிப்பாளர்களின் ஹீரோவாக அவர் எப்போதுமே உள்ள நிலையில் தான் வரிசையாக அந்த ஹீரோவை நம்பி பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
பேராசை பெரு நஷ்டம்: தமாஸ் நடிகர் எல்லாம் பல கோடிக்கு தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய நிலையிலும், சீனியர் நடிகரான ஜாயின்ட் நடிகர் இன்னமும் பேராசை எல்லாம் கொள்ளாமல் இன்னமும் குறைவான சம்பளத்தையே வாங்கி வருகிறாராம். அதன் காரணமாகவே அவரை ஜாயின்ட் அடிக்க பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களும் உடனடியாக தலையாட்டி விடுகிறார்களாம்.
கம்மி சம்பளம்: ஹீரோயின்கள் வாங்கும் அளவுக்கு குறைவான சம்பளத்தை மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க இவர் கேட்டு வருவதால் தான் மற்ற இளம் ஹீரோக்களை துரத்தி விட்டு ஜாயின்ட் நடிகரையே மீண்டும் மீண்டும் இணைத்துக் கொண்டு படத்தை உருவாக்கி வருகின்றனர் என்று கூறுகின்றனர்.
சோலோவாக நடிக்கவும்: தனியாக ஹீரோவாக நடிக்கவும் தாறுமாறாக எல்லாம் சம்பளம் கேட்காமல் சரியான அளவுக்கு கேட்டு வருவதால் தான் இந்த நடிகர் கைவசம் தற்போது 8க்கும் மேற்பட்ட படங்கள் இருப்பதாக கூறுகின்றனர். அதிகப்படங்களில் இப்படி நடித்து மற்ற நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட சைலன்ட்டாக அதிகம் சம்பாதித்து வருகிறார் என்றும் இவருக்கு பட வாய்ப்புகளை பெற்றுத் தர மனைவியின் அம்மாவும் ஏகப்பட்ட முயற்சிகளை செய்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











