வரம்பு மீறி பேசியதெல்லாம் .. இப்போ வினையா வந்து நிக்குதே.. மறைந்து ஓடும் காமெடி நடிகர்!

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக இருக்கும் அந்த காமெடி நடிகருக்கு ஏற்கனவே படம் இல்லாமல் போய், இப்போது தான் ஒரு சில படத்தில் தலைகாட்டி நடித்து வருகிறார். அதற்கும் உளை வைப்பது போல தற்போது புது பிரச்சனை ஒன்று கிளப்பி உள்ளதால், காமெடி நடிகர் சோலியை முடிச்சுட்டாங்கடா என தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு புலம்பி வருகிறாராம்.

சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் படவாய்ப்பு தேடி அலைந்த போது, அந்த நகைச்சுவை நடிகருக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்தார் அந்த பெரிய நடிகர். அவரின் பல படத்தில் தொடர்ந்து நடித்து முன்னணி நகைச்சுவை நடிகர் என தமிழக மக்கள் அவரை கொண்டாடினார்கள். தனது உடல்மொழியாலும், டைமிங் நகைச்சுவையாலும் பலரை சிரிக்க வைத்ததால், ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைக்கு தமிழ் சினிமா சென்றது. காமெடி நடிகரை வளர்ந்துவிட்ட அந்த பெரிய நடிகர் அரசியல் கட்சி தொடங்கிய போது, நகைச்சுவை நடிகருக்கும் பெரிய நடிகருக்கும் இடையே சின்ன கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

Gossip Tamil cinema

பாவம் காமெடி நடிகர்: இதைத்தொடர்ந்து, வளர்த்த மாடு மார்பில் பாய்ந்த கதையாக, சினிமாவில் ஒரு நல்ல இடத்தை கொடுத்த பெரிய நடிகரை பற்றி, எதிரி கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார் அந்த காமெடி நடிகர். இதனால், இருவருக்கும் இடையே இருந்த சிறிய விரிசல் பெரிதாக கொண்டார்கள் கொதித்துப்போனார்கள். ஆனால், பெரிய நடிகரோ அவன் புத்தி அவ்வளவு தான், விடுங்கப்பா தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் கட்டுப்படுத்தினார். பெரிய நடிகர் பெருந்தன்மையாக விட்டாலும், காமெடி நடிகர், அரசியல் மேடையில் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பெரிய நடிகரை பேசி பெயர் எடுத்தார். ஒரு கட்டத்தில் காமெடி நடிகர் ஆதரித்து பேசிய கட்சி தோற்றுப்போக, காமெடி நடிகருக்கு சரியான படத்தை கற்றுக்கொடுத்து இந்த இலை காட்சி. இதனால், கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கும் மேலாக சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார்.

வினையா வந்து நிக்குதே: இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன் காமெடி நடிகர் ஒரு படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படத்தில், இவரை யாரும் ரசிக்கவே இல்லை. இதையடுத்து, வேறு ஒரு படத்தில் காமெடியை ஒதுக்கிவைத்து விட்டு, குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்தார் அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் மீண்டும் தான் ஏற்கனவே ஆதரித்து பேசிய வந்த அரசியல் கட்சியை ஆதரித்து பற்றி பேசி வருகிறார்.

இந்நிலையில், இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் பெரிய நடிகர் தொடங்கிய அரசியல் கட்சியுடன் காமெடி நடிகர் ஆதரித்து பேசிய கட்சி கூட்டு சேர்ந்துள்ளது. இதனால், தற்போது காமெடி நடிகரின் பாடு திண்டாட்டமாகி உள்ளதாம். என்னைக்கோ வரம்பு மீறி பேசியது எல்லாம் இன்னைக்கு வினையா வந்து நிக்குதே என தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு புலம்பி கொண்டு மறைந்து ஓடி வருகிறாராம் காமெடி நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X