அசிங்கப்படுத்திய பிரகாச நடிகருடன் ஒருவழியா அந்த இயக்குநர் சமாதானம் ஆகிட்டாராம்.. அதற்குத்தானா?

By Staff

சென்னை; உங்க ஸ்க்ரிப்ட் பிடிக்கவில்லை என ஸ்பீடு இயக்குநரை பிரகாச நடிகர் அசிங்கப்படுத்திய நிலையில், அந்த இயக்குநர் கடுப்பாகி பெரும் சவாலே விட்டு இருந்தார்.

இந்நிலையில், சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரகாச நடிகருடன் சமாதானம் ஆகிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த திடீர் சமாதான முடிவுக்கு என்ன காரணம் என்கிற தகவலும் கூடவே வெளியாகி இருப்பது கோடம்பாக்கத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

வெற்றி தந்த இயக்குநர்

வெற்றி தந்த இயக்குநர்

அந்த பிரகாச நடிகரை மாஸ் ஹீரோவாக மாற்றி ஏகப்பட்ட கமர்ஷியல் ஹிட்களை கொடுத்தவர் அந்த ஸ்பீடு இயக்குநர். கிராமப்புற கதைகளை கையில் எடுத்துக் கொண்டு கேமராவை ஒரே நொடியில் ஒன்பது கோள்களுக்கும் ஓட வைத்து எடுக்கக் கூடியவர் அவர். அந்த காட்டு ராஜாவின் பெயரை கொண்ட பல பாகங்கள் வெறித்தனமாக வசூல் வேட்டையை ஆடின.

சொதப்பிய சதுரம்

சொதப்பிய சதுரம்

ஆனால், பக்தியின் ஆணிவேரை குறிக்கும் படத்தின் இரண்டாம் பாகத்தை அந்த இயக்குநர் எடுத்து தனது தலையில் தானே மண் அள்ளி வாரிப் போட்டுக் கொண்டார். இதனால், முன்னணி நடிகர்கள் யாரும் அந்த இயக்குநர் பக்கமே தலை வைத்து படுக்க பயந்து நடுங்கினர். இதனால், பல ஹிட்களை கொடுத்த பிரகாச நடிகரை நம்பி அந்த இயக்குநர் சென்றார்.

டிராப்பான படம்

டிராப்பான படம்

ஆரம்பத்தில் கதையை கூட கேட்காமல் அந்த இயக்குநருக்காக நட்புக்காக படம் பண்ணலாம் என்கிற முடிவை அந்த நடிகர் எடுத்தார். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் முழு கதையையும் சொல்லிடுங்க என சொன்ன நிலையில், இயக்குநர் சொன்ன கதையில் அவருக்கு ஆர்வம் இல்லாததால் அந்த படத்தில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்த நிலையில், அப்படியே அந்த படம் டிராப்பானது இயக்குநரை பெரும் மன உளைச்சலில் தள்ளியது.

மோதலுக்கு ரெடி

மோதலுக்கு ரெடி

அந்த நடிகரின் படத்துடன் என் படத்தை வெளியிட்டு வெற்றிப் பெற்று காட்டுகிறேன் என்றும் அதிரடியாக அந்த இயக்குநர் சவால் விட்டதாக கோடம்பாக்கத்தில் அப்போதைக்கு ஒரே பரபரப்பு பேச்சாக இருந்தது. மேலும், இனிமேல் அந்த நடிகருடன் சேர்ந்து படம் பண்ணப் போவதில்லை என்கிற முடிவையும் இயக்குநர் எடுத்ததாக கூறப்பட்டது.

சினிமாவில் இதெல்லாம் சாதாரணம்

சினிமாவில் இதெல்லாம் சாதாரணம்

அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்பதை விட இதுபோன்ற சண்டைகளும் சமாதானங்களும் சினிமாவில் 100 மடங்கு சாதாரணம் என்பது அனைத்து சினிமாக்காரர்களுக்கும் தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் நடிகரும் அந்த இயக்குநரும் பழசை மறந்து விட்டு சமாதானம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

எல்லாம் அதுக்குத்தானா

எல்லாம் அதுக்குத்தானா

பிரகாச நடிகரின் குடும்பத்து உறவினர் தயாரிப்பு நிறுவனத்தில் புதிதாக அந்த இயக்குநர் படம் பண்ணப் போகிறாராம். அதன் காரணமாகவே இந்த சமாதான முயற்சி நடந்துள்ளதாக பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் தற்போது ஒவ்வொரு டீ கடை பெஞ்சிலும் பேசப்பட்டு வருகின்றன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வாய்ப்பும் இருக்காம்

அந்த வாய்ப்பும் இருக்காம்

மேலும், பிரகாச நடிகருடன் கூடிய விரைவிலேயே கைவிடப்பட்ட அந்த படத்தையும் இயக்கும் முயற்சிகளையும் அந்த ஸ்பீடு இயக்குநர் எடுத்து வருகிறாராம். கதையில் கொஞ்சம் பட்டி டிக்கரிங் பணிகளை பார்க்கும் வேலைகளையும் மும்முரமாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X