படம் வர வரைக்கும் தான் அந்த இயக்குநரின் பில்டப் எல்லாமே.. வந்ததுக்கு அப்புறம் நிலைமையே மாறிடுமாம்?

By Staff

சென்னை: முன்னணி நடிகரை வைத்து படம் இயக்கியுள்ள அந்த பாப்புலர் இயக்குநர் சமீப காலமாக பேட்டியில் பல பொய்களை அசால்ட்டாக சொல்லி வருகிறார் என்றும் எந்தவொரு பிரச்சனையும் தன்னிடமோ தனது படக்குழுவிடமோ இல்லை என்பது போல பேசி வருகிறார். ஆனால், படம் தாமதமானதற்கு மட்டும் சரியான காரணத்தை சொல்லாமல் தவிர்த்து வருவது ஏன் என பிரபலம் ஒருவர் பேசியிருப்பது பகீரை கிளப்பியுள்ளது.

அந்த இயக்குநர் இயக்கத்தில் வெளியான படங்களில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் எதுவுமே பெரிதாக ஓடவில்லை. ஆனால், தன்னை ஒரு ஜீனியஸ் இயக்குநர் என்பது போலவும் தன்னுடைய புதிய படம் வந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடும் என்கிற பில்டப்பை ஒவ்வொரு பேட்டியிலும் பேசி வருகிறார்.

gossip kollywood actors gossip

ஆனால், படம் வெளியான பின்னர், அவருடைய இந்த டோன் டோட்டலாக மாறிவிடும் என்றும் இந்த படத்தை முடித்த இயக்குநருக்கு இன்னமும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்புக் கூட கிடைக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமே படத்தின் ரிசல்ட்டை பொறுத்துதான் அடுத்த பட வாய்ப்பு என்கிற ரீதியில் இயக்குநரின் நிலைமை இருப்பது தான் காரணம் என்கின்றனர்.

ஓவர் பில்டப்பா இருக்கே: படம் வெளியாகாத நிலையில், அந்த இயக்குநர் பேசி வரும் பில்டப்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருப்பதாகவும் படத்திற்கு மார்க்கெட்டில் கொஞ்சம் கூட ஹைப் இல்லாத நிலையில், இயக்குநர் தான் தனியாளாக அமர்ந்துக் கொண்டு அந்த படத்தை பற்றி ஏகப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர்.

தயாரிப்பு நிறுவனத்துக்கே நம்பிக்கை இல்லை: பெரியளவுக்கு படத்தை புரமோட் செய்ய தயாரிப்பு நிறுவனமே தயங்கி வரும் நிலையில், இயக்குநர் மட்டுமே நடிகரின் ரசிகர்களுக்காக ஊக்கமளிக்கும் டானிக் வார்த்தைகளை பேசி வருகிறார் என்றும் அந்தளவுக்கு எல்லாம் படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் தியேட்டரில் படம் வெளியானால் நிச்சயம் ரசிகர்களை பெரிதாக படம் ஈர்க்க வாய்ப்பே இல்லை என கோலிவுட் பிரபலம் ஒருவரே பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுப்பாக போறாங்க: ஜெனரல் ரசிகர்களை விட நடிகரின் ரசிகர்கள் கூட இந்த படத்தை பார்த்துவிட்டு ஹேப்பியாவார்களா என்பதே கேள்விக்குறி தான் என்றும் ரொம்பவே பழைய கதையை கோடிக்கணக்கில் செலவு செய்து டச்சப் செய்திருக்கும் நிலையில், படம் எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது ரிலீஸ் ஆனாதால் தெரியும் என்கின்றனர். ரசிகர்களுக்காக எந்தவொரு விஷயமும் இல்லாமல் தனக்கு பிடித்த கதையை இயக்குநரை வைத்து நடிகர் எடுத்துள்ள நிலையில், அதை சமாளிக்கத்தான் நடிகர் குறித்தும் படம் குறித்தும் பிரம்மிப்பை உருவாக்கும் முயற்சிகளில் அந்த இயக்குநர் ஈடுபட்டு வருகிறார் என்றும் படம் வெளியான பின்னர், நிச்சயம் அவரது டோனே மாறிவிடும் பாருங்க என்று கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X