பிறந்தநாளிலும் மன நிம்மதி இல்லாமல் தவித்த பிரபல இயக்குநர்.. காரணம் அந்த விஷயம் தானாம்!
சென்னை: வெகு விரைவில் அந்த பிரபல இயக்குநரின் பிரம்மாண்ட படம் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென வந்த அந்த சிக்கலால் ரிலீஸ் தள்ளிப் போகும் என்கிற நிலை உருவாகி உள்ளதாம்.
பார்த்து பார்த்து உயிருக்கு உயிரான படமாக அந்த படத்தை இயக்குநர் இயக்கி வந்த நிலையில், ஒட்டுமொத்தத்திற்கும் வேட்டு வைக்கும் விதமாக அந்த பிரபலம் பண்ண வேலை இயக்குநரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம்.
இதன் காரணமாக தனது பிறந்தநாளில் கூட மன நிம்மதியில்லாமல் அந்த இயக்குநர் தவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீண்ட கால கனவு
இப்படியொரு பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என அந்த பிரபல இயக்குநர் திட்டமிட்டு வந்தார். நட்சத்திர பட்டாளத்தை எப்படி கையாளப் போகிறோம் என்பதை அறிந்து கொள்ளவே அதற்காகவே ஒரு மல்டி ஸ்டார் படத்தையும் அவர் இயக்கி இருந்தார். பல முன்னணி நடிகர்களின் கனவாக இருந்த அந்த கதை தற்போது இவர் மூலம் படமாக உருவாகி வரும் நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

சுக்குநூறாக உடைந்தது
ஆனால், பெரிய அளவில் வைக்கப்பட்ட எதிர்பார்ப்பே அந்த படத்தின் முதல் அறிவிப்புக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது. அந்த பிரபல இயக்குநரின் படைப்பில் உருவான முதல் தோற்றத்தை பார்த்தே ரசிகர்கள் போட்டோஷாப்பே இதை விட சிறப்பாக இருக்குமே என ட்ரோல் செய்தது இயக்குநரின் தன்னம்பிக்கையை சுக்குநூறாக உடைத்து விட்டது.

இசையமைப்பாளர்
அதையும் கண்டு கொள்ளாமல், படத்தை முடிக்கும் இறுதி கட்ட பணிகளுக்காக இயக்குநர் இசையமைப்பாளருக்கு அழுத்தம் கொடுக்க, இசையமைப்பாளர் சொன்ன நெகட்டிவ் கமெண்ட் தான் இயக்குநரை முற்றிலுமாக உடைத்து விட்டதாக கூறுகின்றனர். மறுபடியும் முதலில் இருந்தா எடுக்க முடியும் என தலை பிய்த்துக் கொண்டு சுற்றுகிறாராம் அந்த இயக்குநர்.

பிறந்தநாளில் சங்கடம்
சமீபத்தில் வந்த தனது பிறந்தநாளை கூட சிறப்பாக கொண்டாடி படத்திற்கு புரமோஷன் செய்யும் வேலையை கூட அந்த இயக்குநர் செய்ய முடியாமல் மன சங்கடத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு இன்னும் சில மாதங்களுக்குள் எப்படி அனைத்தையும் சரி செய்வது என தெரியாமல் தவித்து வருகிறாராம்.

நொந்துப்போன ரசிகர்கள்
பணம் போட்டவர் பிறந்தநாளிலேயே அறிவிப்புகள் வெளியான நிலையில், மூலவரின் பிறந்தநாளில் எந்தவொரு அறிவிப்பும் இல்லையே? ஏன் என்றும் சமீபத்தில் கதையின் நாயகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கூட எந்தவொரு கூடுதல் அப்டேட்டும் வராதது ரசிகர்களை மிகவும் நோகடித்து விட்டது. சிஜி மீது பழியைப் போட்டு ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பார்கள் என்றே பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











