For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கதையில் தலையை விட்ட வாரிசு நடிகர்..ஆளவிடுறா சாமி என எஸ்கேப் ஆன செல்வ இயக்குநர்.. அப்செட்டில் அப்பா?

  By Staff
  |

  சென்னை: பெரிய நடிகரின் மகன் என்பதால் ஈஸியாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த வாரிசு நடிகருக்கு பொறுமையோ, பண்போ சுத்தமாக இல்லை என பெரிய பேச்சு கிளம்பி உள்ளது.

  முதல் பட இயக்குநரையே ஃபீல்ட் அவுட் ஆக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் ஆன அந்த வாரிசு நடிகர் அப்பா தயவில் அவர் நிழலிலேயே இன்னொரு படத்தையும் நடித்து முடித்தார்.

  ஆனால், அவரது ராசியோ என்னமோ தெரியவில்லை. அவர் நடித்த படங்கள் எதுவுமே சரியாக ஓடாமல் அவருக்கு பேரிழப்பை கொடுத்தது.

  நடிகரின் மனைவியிடம் கத்திமுனையில் 200 பவுன் நகை கொள்ளை..சென்னையில் அடைமழையை பயன்படுத்தி துணிகரம்நடிகரின் மனைவியிடம் கத்திமுனையில் 200 பவுன் நகை கொள்ளை..சென்னையில் அடைமழையை பயன்படுத்தி துணிகரம்

  வாரிசு நடிகர்

  வாரிசு நடிகர்

  பாலிவுட்டில் மட்டுமின்றி இந்திய சினிமா அனைத்திலும் நெப்போடிச பிரச்சனைகள் கிளம்பி உள்ளன. அப்படி கோலிவுட்டின் பெரிய நடிகர் ஒருவரின் வாரிசு நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன் என அடம்பிடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்த நிலையில், இதுவரை எந்தவொரு படமும் அவருக்கு ஓடாமல் அவரை இண்டஸ்ட்ரியை விட்டே ஓட வைத்துள்ளது.

  ரொம்ப அவசரம்

  ரொம்ப அவசரம்

  அப்பா எல்லாம் எத்தனை படங்கள் நடித்து அடிபட்டு, மிதிப்பட்டு இந்த துறையில் சாதித்தும் சறுக்கியும் வரும் நிலையில், எடுத்த உடனே பெரிய ஹிட் கொடுக்கப் போகிறேன் என்கிற மிதப்பில் அந்த வாரிசு நடிகர் பண்ண அட்டகாசம் எல்லாம் இப்போ அவருக்கே பெரிய ஆப்பாக முடிந்து விட்டது. நடிகரின் அவசரத்தை பார்த்து எந்தவொரு இயக்குநரும் அவரை இயக்கவே முன் வரவில்லையாம்.

   கழட்டிவிட்ட இயக்குநர்

  கழட்டிவிட்ட இயக்குநர்

  விருதுகளை வாரிக் குவிக்கும் படங்களாக எடுத்து வரும் அந்த செல்வ இயக்குநருடன் வாரிசு நடிப்பதாக ஒப்பந்தங்கள் எல்லாம் போட்டு படத்தின் கதை பற்றிய தகவல்களும் கசிந்தன. ஆனால், திடீரென அந்த செல்வ இயக்குநர் அந்த வாரிசு நடிகர் படத்தை ஆரம்பிக்காமல் வேறு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். கர்மா ஒரு பூமராங் போல ஒரு இயக்குநரை இவர் கழட்டிவிட்ட நிலையில், தற்போது இன்னொரு இயக்குநர் இவரை கழட்டி விட்டுள்ளார்.

  என்ன காரணம்

  என்ன காரணம்

  ஏன் அந்த வாரிசு நடிகரின் படம் ஆரம்பிக்காமல் வேறு நடிகர்களை இயக்க அந்த இயக்குநர் முடிவு செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில் தேவையில்லாமல் இயக்குநரிடம் சென்று கதையில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்ய வேண்டும் என இஷ்டத்துக்கு தனது கருத்துக்களை சொல்கிறேன் என்கிற பெயரில் இயக்குநரை கடுப்பாக்கி விட்டாராம்.

  அப்பா அப்செட்

  அப்பா அப்செட்

  பேரக் குழந்தைகளை எடுத்த பின்னரும் ஹீரோவாக இரண்டு மூன்று ஹீரோயின்களுடன் அசத்தி வரும் அந்த அப்பா நடிகர் மகனின் பட வாய்ப்புகள் தள்ளிப் போவதை அறிந்து ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். எப்படியாவது ஒரு பெரிய இயக்குநர் படத்தில் நடிக்க வைத்து மகனை பெரிய ஹீரோவாக்கி விட வேண்டும் என தெரிந்த நண்பர்களிடத்தில் எல்லாம் பேசி வருவதாக கூறுகின்றனர்.

   இயக்கத்தில் ஆர்வம்

  இயக்கத்தில் ஆர்வம்

  நடிப்பு செட் ஆகவில்லை என்றால் படங்களை இயக்க ஆரம்பித்து விடுவேன் என்று அப்பாவிடமே அதிரடியாக கூறி இயக்கத்தில் ஆர்வத்தை செலுத்தி வருகிறாராம் அந்த வாரிசு நடிகர். சினிமாலாம் அவ்ளோ ஈஸி கிடையாதுப்பா.. கொஞ்சம் வெயிட் பண்ணு நல்ல படம் கிடைக்கும். அப்புறம் எல்லாமே சேஞ்ச் ஆகிவிடும் என அப்பா தொடர்ந்து அட்வைஸ் செய்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  English summary
  Popular Director drops the Heir Actor Movie due to this reason buzz trending in Cinema Industry. Father actor upsets over his son missed such a good director movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X