வெளியே தான் கெத்தா டைரக்டர்னு சுத்துறாராம்.. 3 மாசமா கடன் கட்டக்கூட காசு இல்லையாம்?

By Staff

சென்னை: பிரபல நடிகரை நம்பி சில ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் பண்ண முடியாமல் காத்துக் கிடந்த அந்த இயக்குநர் கடன் நெருக்கடியில் தவித்து வருவதாக கூறுகின்றனர். பெரிய இயக்குநர் ஆகிட்டோமே என்கிற நினைப்பில் கிடைத்த சம்பளத்துக்கும் அதிகமான தொகையை கொடுத்து நிலம் ஒன்றை வாங்கி போட்டிருக்கிறார்.

அடுத்த படம் புக் ஆகிவிடும் என தெரிந்த நிலையில், வாங்கிய நிலத்தில் காஸ்ட்லியாக வீடு ஒன்றையும் கட்ட வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார். இயக்குநர் என்பதால் தாராளமாக நிலம் இருக்கும் இடத்துக்கு லோன் கிடைக்க வீட்டையும் கட்டி விட்டாராம்.

Popular Director facing severe loan debts due to the delay of his next movie

ஆனால், கடந்த சில வருடமாக அந்த பிரபல நடிகரை நம்பி படத்தை இப்போ ஆரம்பிப்பார், அப்போ ஆரம்பிப்பார் என காத்துக் கொண்டிருக்கும் இயக்குநருக்கு அதிகமான இஎம்ஐ கடன் சுமையாக மாறிவிட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் கசிந்துள்ளன.

பெரிய நடிகர்கள் மட்டுமே ஹேப்பி: சினிமாவில் பெரிய நடிகர்கள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக இருக்கின்றனர். அவர்களை பல கோடிகள் சம்பளம் வாங்க வைக்க போராடும் இயக்குநர்களையும், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களையும் ஹீரோக்கள் கண்டு கொள்வதே இல்லை என்கின்றனர். டாப் நடிகரை நம்பி தொடர்ந்து அவருடன் பல படங்களில் பயணித்த அந்த இயக்குநர் தற்போது கடன் பிரச்சனையில் கஷ்டப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

கைவிரித்த நடிகர்: டாப் நடிகரின் படத்தில் கிடைத்த சம்பளத்தை வைத்து ஆழம் தெரியாமல் காலை விட்டது போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அந்த பிரபல இயக்குநர் அடுத்து பிரபல நடிகரின் படம் கிடைத்தும் அதற்காக சில ஆண்டுகள் காத்திருந்து கடைசியாக கைவிடப்பட்ட நிலையில், கடனில் தத்தளித்து வருகிறார் என்கின்றனர்.

2 கோடி கடன்: அந்த இயக்குநருக்கு அதிகபட்சமாக 2 கோடி வரை கடன் இருப்பதாகவும் அடுத்த படத்தை ஆரம்பித்து சம்பளம் வந்தால் ஒரே நொடியில் அடைத்து விடுவார். ஆனால், அந்த நொடி தான் இன்னமும் வரவில்லை. 20 லட்சமாக ஆரம்பித்த கடன் அடுத்த படத்தை நம்பியே நண்பர்கள் முதல் வங்கிகள் வரை பலரிடமும் பந்தா காட்டியே 2 கோடி வரை வந்து விட்ட நிலையில், மனைவி சரியான டோஸ் விட்டுள்ளதாக கூறுகின்றனர். சீக்கிரமே ஏதாவது பெரிய நடிகர் உதவி செய்தால் தான் அந்த இயக்குநர் இந்த பெரிய சிக்கலில் இருந்து மீள்வார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X