Don't Miss!
- News
மருத்துவர் அறையில் தயாளு அம்மாள் கொடுத்த சூப்.. மிசாவை நினைவுகூர்ந்து முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நாக்குல இன்னும் ஏழரை போகல.. பிரபல இயக்குநரையே டென்ஷன் ஆக்கிய காமெடி நடிகர்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: வாழ்க்கையில் ஏழரை வந்ததால் சில ஆண்டுகள் நடிக்கவே முடியாமல் போன அந்த பிரபல காமெடி நடிகரின் நாக்குல இன்னும் ஏழரை போகல என கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
முன்பை போல டைமிங் காமெடி எல்லாம் வரவில்லை என்றாலும், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸ் வைத்து மீண்டும் ஓட்டலாம் என நம்பிய இயக்குநரையே கடைசியில் ரொம்ப டென்ஷன் ஆக்கி விட்டாராம் அந்த காமெடி நடிகர்.
காமெடி நடிகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பண்ண அந்த செயல் இயக்குநரை பயங்கர கடுப்பில் ஆழ்த்த அப்படியொரு முடிவையே அவர் எடுத்து விட்டார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
படமே
ஓடல..
35
கோடி..
40
கோடி
என
வாய்க்கூசாம
கேட்கிறாங்களே..
போட்டி
நடிகர்களால்
புலம்பும்
கோலிவுட்!

ஃபீல்டு அவுட்
தடை விதிப்பதற்கு முன்பாகவே அந்த காமெடி நடிகரின் படங்கள் எல்லாம் கொஞ்சமும் சிரிப்பை ஏற்படுத்தாத அளவுக்கு படு மொக்கையாக மாறின. அதன் பிறகு அவருக்கு ஏறிய தலைகணம் தான் அந்த பார்ட் 2 படத்தையே பண்ண முடியாமல் போனது என்கின்றனர். ஒட்டுமொத்தமாக ஃபீல்ட் அவுட் ஆனாலும் இன்னமும் அவருக்கு செருக்கு சற்றும் குறையவில்லை என்பதை ஒட்டுமொத்த யூனிட்டே உணர்ந்த தருணம் சமீபத்தில் நடந்துள்ளது தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

வீண் செலவு
நடிகரை நம்பி அந்த பெரிய நிறுவனம் படங்களை தயாரித்து வரும் நிலையில், உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்வது போல தேவையில்லாமல் பல வீண் செலவுகளை இழுத்து விட்டு வருகிறாராம். வம்பு நடிகர் எல்லாம் மீண்டும் வந்த போது பழசை எல்லாம் மறந்து விட்டு புதிய மனிதராக நடித்து வரும் நிலையில், இந்த காமெடி நடிகரிடம் ஒரு சின்ன மாற்றம் கூட ஏற்படவில்லையாம்.

கவனமே இல்லை
அந்த பார்ட் 2 படத்தில் மீண்டும் காமெடி நடிகராக நடித்து வரும் அவருக்கும் இயக்குநருக்கும் சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே முட்டிக் கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. காமெடி காட்சி ஒன்றை தொடர்ச்சியாக இயக்குநர் எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்சம் கூட அந்த நடிகரின் கவனம் இங்கே இல்லாமல், அவருடைய இன்னொரு படத்திலேயே சென்று விட்டதால் இயக்குநர் ரொம்பவே டென்ஷன் ஆகி விட்டாராம்.

ரொம்ப அடம்
அந்த காமெடி காட்சியை முடிக்காமல், நான் அந்த படத்துக்கு ஷூட்டிங் போகணும் என திடீரென காமெடி நடிகர் அடம் பிடித்தது அந்த பிரபல இயக்குநரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டதாம். நீ மட்டும் இப்போ இந்த செட்டை விட்டுப் போனால் அந்த காட்சியையே கட் பண்ணிடுவேன் என இயக்குநர் மிரட்டியும் காமெடி நடிகர் செவி சாய்க்காமல் தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாராம்.

நாக்குல ஏழரை
காமெடி நடிகர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற நிலையில், அந்த காமெடி காட்சியையே மொத்தமாக படத்தில் இருந்து பிரபல இயக்குநர் கோபத்தின் காரணமாக தூக்கி விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 நாட்கள் கஷ்டப்பட்டு எடுத்த காமெடி காட்சியை இன்னும் ஒரு நாள் அந்த நடிகர் அமைதியாக நடித்துக் கொடுத்திருந்தால் கம்ப்ளீட்டே ஆகியிருக்கும் அப்படியொரு நிலைமையில் இப்படி ஆகிடுச்சே என்றும் அவருக்கு இன்னும் நாக்குல ஏழரை போகல என பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.