அப்பவே சொன்னேன் வாரிசு நடிகை வேணாம்னு கேட்டீங்களா?.. பிரபல இயக்குநரை வார்ன் பண்ண மனைவி?..

By Staff

சென்னை: அந்த பிரபல நடிகரின் மகளுடன் இயக்குநர் சேர்ந்து நடித்தது கடும் ட்ரோல் மெட்டீரியல் ஆகி உள்ள நிலையில், அந்த நடிகையுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என இயக்குநரின் மனைவி வார்ன் செய்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

குறுகிய காலத்தில் நல்ல படங்களை கொடுத்து அடுத்தடுத்து பெரிய நடிகர்களை பிடித்து முன்னணி இயக்குநராகவே மாறி விட்டார் அந்த இயக்குநர். அவர் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதை இருந்து வந்தது.

Popular director gets trolled by his wife too for the recent romantic song teaser


அதிலும், பெண்கள் விஷயத்தில் அவர் ரொம்பவே டெரர் பார்ட்டிப்பா என சொல்லி வந்த நடிகைகளே தற்போது வாரிசு நடிகையின் பின்னால் அந்த இயக்குநர் போய் விட்டாரே என காசிப் பேச ஆரம்பித்து விட்டார்கள் எனக் கூறுகின்றனர்.

வாரிசு நடிகையுடன் மஜா: தனது படங்களிலேயே காதல் பாடல்களை எப்படி அமைப்பது என்று தெரியாமல் இருந்து வந்த இயக்குநருக்கு லவ் குருவாகவே வாரிசு நடிகை மாறி எல்லா வித்தைகளையும் அக்குவேறு ஆணிவேறாக சொல்லிக் கொடுத்து விட்டாராம். இது ரொம்ப நல்லா இருக்கே பாஸ் என ரிலாக்ஸாக நடிகையுடன் ரொமான்ஸ் பாடத்தை சுமார் ஒரு வாரம் கற்று வந்திருக்கிறாராம் அந்த இயக்குநர்.

வார்ன் பண்ண மனைவி: வாரிசு நடிகையுடன் இப்படியொரு பாடலில் நடிக்க போகிறேன் என தனது மனைவியிடம் இயக்குநர் சொன்னதும் முதல் ஆளாக வேண்டாம்ங்க எல்லாரும் பயங்கரமா ட்ரோல் பண்ணுவாங்க, தேவையில்லாமல் பெயர் கெட்டுப் போகும் என மனைவி சொல்லி எச்சரித்தாராம். ஆனால், அதையும் தாண்டி வாரிசு நடிகையுடன் நடித்த நிலையில், தற்போது எல்லாரும் கலாய்ப்பதை பார்த்த மனைவி நான் தான் அப்பவே சொன்னேன்ல என கணவரை பங்கமாக கலாய்த்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அப்செட்டான காதலர்: திடீரென பாடல் மேக்கிங்கில் தன்னை கழட்டி விட்டு அந்த இயக்குநருடன் இணைந்து விட்டாரே என்றும் தன்னிடம் இதுபற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சில நாட்கள் தனிமையில் தவிக்க விட்டு விட்டாரே என வாரிசு நடிகையின் காதலரும் செம கடுப்பில் இருந்து வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

அப்பாவுக்கு அதிர்ச்சி: இருவரும் சேர்ந்து பாட்டு பண்றாங்க என்று சொன்னதும் தாராளமா பண்ணட்டுமே என்று ஒப்புதல் அளித்து விட்டு தனது படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் அப்பாவுக்கு நேற்று வீடியோவை பார்த்ததும் செம ஷாக் ஏற்பட்டு விட்டது என்றும் கிசுகிசுக்கள் கோடம்பாக்கம் முழுவதும் பரவி வருகின்றன. உடனடியாக மொத்த பாடலையும் போட்டுக் காட்டு என்று சொல்லி பார்த்த பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X