கருப்பு டிரஸ்.. அந்த காமெடியனும் கூட இல்லை.. பட்ட அவமானத்துக்கு பழி வாங்கினாரா டாப் டைரக்டர்?
சென்னை: கோலிவுட்டின் டாப் டைரக்டருக்கு கடந்த முறை நடந்த அவமானம் இன்னமும் மனதில் ரணமாகவே இருப்பது போலத் தெரிகிறது. அதை போக்குவதற்காக சமீபத்திய விருது விழா நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் பல விருதுகளை அந்த இயக்குநரின் படத்துக்கு அறிவித்தனர். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கே போகாமல் தவிர்த்து விடலாம் என்றே இயக்குநர் முதலில் நினைத்தாராம். கடைசியில், நண்பர்கள் சிலரது அறிவுறுத்தலின் படி இயக்குநர் சென்றாலும் அவரது எதிர்ப்பை காட்டி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சினிமாவில் வெற்றி, தோல்வி எல்லாம் சகஜமான ஒன்று தான். ஆனால், அதற்காக ஒருவரை இழிவாக பேசுவதோ, நடத்துவதோ தவறான விஷயம். ஆனால், இங்கே யாருக்கு மார்க்கெட் இருக்கிறதோ அவரைத்தான் தூக்கி வைத்து கொண்டாடும் வழக்கம் காலம் காலமாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

அந்த இயக்குநரின் முந்தைய படங்கள் ஹிட் அடித்த நிலையில், மாஸ் ஹீரோவை வைத்து அவர் இயக்கிய படம் மண்ணை கவ்வியது. உடனடியாக இயக்குநரை ஒரு பொருட்டாகவே பலரும் மதிக்காத நிலையில், விருது விழாவிலும் அவர் அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சொல்லி அடித்த இயக்குநர்: வெற்றிப் படத்தை அடுத்து கொடுத்து தன்னை அவமதித்தவர்களை எல்லாம் தலைகுனிய வைக்கிறேன் என்றும் அவர்களே தன்னை தூக்கி கொண்டாடுவார்கள் பாருங்கள் என்கிற வைராக்கியத்துடன் படத்தை இயக்கிய இயக்குநருக்கு அவர் நினைத்தது போலவே படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றது. இந்நிலையில், படத்துக்கு விருதுகளும் குவிந்த நிலையில், இயக்குநர் ரொம்பவே ஹேப்பி ஆகியுள்ளார்.
பதிலடி கொடுத்த இயக்குநர்: தனக்கு நேர்ந்த அவமானத்தை அவ்வளவு எளிதில் மறந்து முடியாத நிலையில் உள்ள அந்த இயக்குநர் நிகழ்ச்சிக்கு தனியாளாக வந்தது பலரையும் ஷாக் ஆக்கியது. எந்தவொரு பந்தோபஸ்த்தும் எப்போதுமே கூடவே வரும் அந்த காமெடி நடிகர் கூட இந்த முறை வேண்டாம் என்றும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என மாஸ் காட்டி கருப்பு உடையை அணிந்து கொண்டு வந்தார். இதுக்கு மேல பதிலடி கொடுக்க முடியாது என இயக்குநரின் ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ட்ரோல் செய்து வருகின்றனர். அடுத்த படத்தை இன்னமும் வெயிட்டாக செய்ய அவசரப்படாமல் இயக்குநர் பொறுமை காத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











