நடிகையுடன் ஏற்பட்ட காதல்.. மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல இயக்குநர்.. பரபரக்கும் தகவல்!

By Staff

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு இயக்குநர் இளம் நடிகையுடன் ஏற்பட்ட காதல் காரணமாக தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநரின் திறமையை பார்த்து அந்த நடிகைக்கு காதல் வந்த நிலையில், நடிகையின் மீது அதீத மோகம் இயக்குநருக்கு உண்டாகி விட்டது எனக் கூறுகின்றனர்.

இனிமேல் நாம் இருவரும் இணைந்து வாழலாம் என நடிகை இயக்குநரை பிரைன் வாஷ் பண்ண நிலையில், இந்த ஜோடி சூப்பரா இருக்கே என நினைத்த இயக்குநர் நடிகையுடன் நெருங்கி பழக ஆரம்பித்து இருக்கிறார்.

Popular director ready to divorce his wife after he fall in love with Young actress

கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மோப்பம் பிடித்த மனைவி ஒரு கட்டத்தில் அந்த நடிகையுடன் தொடர்பில் இருக்கீங்களா? என்றே வெளிப்படையாக கேட்க, ஆமாம் இப்போ உனக்கு அதில் என்ன பிரச்சனை என இயக்குநர் கேட்ட நிலையில், இருவருக்கும் இடையே பெரிய சண்டை வெடித்து விட்டது எனக் கூறுகின்றனர்.

நடிகையுடன் நெருக்கம்: பல வெற்றிப் படங்களை கொடுத்த ஆளுமை மிக்க அந்த இயக்குநர் சமீப காலமாக இளம் நடிகையுடன் ஜோடி போட்டு பல இடங்களுக்கு சுற்ற ஆரம்பித்திருக்கிறார். சினிமா வட்டாரத்தில் பார்க்கும் பலரும் இது சரியல்ல என இயக்குநரிடம் சூசகமாகவும் நேரடியாகவும் எச்சரித்த நிலையிலும், அதையெல்லாம் இயக்குநர் கண்டுக்கொள்ளாமல் கரும்புத் தின்ன கூலி கிடைக்கிறது என நடிகையுடன் எந்தளவுக்கு ஜாலியாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு ஜாலியாக இருந்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பின.

மனைவியுடன் விவாகரத்து: பல முன்னணி நடிகைகளை வைத்து படம் இயக்கினால் வீட்டுக்கு வந்தால் மனைவியுடனும் குழந்தைகளுடனும் அன்பாக இருந்து வரும் அந்த இயக்குநரை இந்த நடிகை என்ன மாயம் செய்தாரோ மந்திரம் செய்தாரோ தெரியவில்லை என நடிகைக்கு இயக்குநரின் மனைவி சாபம் விட்ட நிலையில், மனைவியை அடித்ததும் மட்டுமில்லாமல் அவரை விவாகரத்து செய்யவும் இயக்குநர் முடிவு செய்து விட்டதாக திடுக்கிட வைக்கின்றனர்.

விரைவில் திருமணம்: மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து விட்டு அந்த நடிகையுடன் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள அந்த பிரபல இயக்குநர் திட்டமிட்டு இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. கணவரின் இந்த மோசமான செயலால் தனது குழந்தைகளுடன் அம்மா வீட்டுக்கே அவரது மனைவி சென்று விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X