கழட்டி விட்டதால் காண்டு.. டாப் நடிகருக்கு உருவாக்கிய ரோலில் தான் அந்த அரசியல்வாதி நடிக்கிறாரா?
சென்னை: டாப் நடிகரை வைத்து எப்படியாவது ஒரு படத்தை இயக்கி நாமும் முன்னணி இயக்குநராக மாறிவிடலாம் என நினைத்த ரவுடி இயக்குநருக்கு அவரது ஆசைக்கு அடி மடியிலேயே கை வைத்து டாப் நடிகர் விரட்டி அடித்து விட்டார்.
சினிமாவில் பல இயக்குநர்கள் பல நடிகர்களிடம் கதை சொல்லி ரிஜெக்ட் ஆன கதைகள் ஏராளம் தான். ஆனால், ரவுடி இயக்குநர் அசிங்கப்பட்டதை போல யாருமே பட்டிருக்க மாட்டார்கள்.

இந்நிலையில், தனது கதையில் எந்த இடத்தில் குறை இருக்கு என நினைத்த அவர் டாப் நடிகருக்கு உணர்த்தும் விதமாக அந்த கதாபாத்திரத்தை பிரபல அரசியல் தலைவரை வைத்து படமாக்கி வருவதாக ஷாக்கிங்கான தகவல்கள் கசிந்துள்ளன.
ஆளை மாற்றிய நடிகர்: கிட்டத்தட்ட பல மாதங்கள் ஒரு இயக்குநரை காக்க வைத்து எல்லா அறிவிப்புகளையும் சொல்லி விட்ட பின்னர், அவர் சொன்ன கதை பிடிக்கவில்லை என டாப் நடிகர் விரட்டி விட்டு வேறு ஒரு இயக்குநரை தேடி அலைந்து தற்போது பல மாதங்களாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். பெரும் அவமானத்தை சந்தித்த அந்த இயக்குநர் மீண்டு வந்து தரமான படத்தைக் கொடுத்து டாப் நடிகருக்கு புத்தி புகட்ட நினைத்து விட்டார் என்கின்றனர்.
அரசியல்வாதியை வைத்து: நீண்ட வருடங்களாக நடிக்காமல் அரசியலில் ஈடுபட்டு வரும் அந்த பிரபலத்தை மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்து படம் இயக்க காரணமே ஒரு பெரிய பிரபலத்தை வைத்து தான் சொல்ல வந்த கருத்தை ரசிகர்களுக்கும் மக்களுக்கும் சொல்ல நினைத்தது தான் என்கின்றனர்.
டாப் நடிகருக்கு உருவாக்கப்பட்ட கதை: மேலும், இதுதான் டாப் நடிகருக்காக அந்த இயக்குநர் செதுக்கிய கதை என்றும் அப்பா மகன் டபுள் ஆக்ஷன் கதையாக உருவாக்கிய கதை பிடிக்கவில்லை என நடிகர் வேண்டாம் என நிராகரித்த நிலையில், அந்த கதையை வித்தியாசமாக மாற்றி தற்போது எடுத்து வருகிறார் என்கின்றனர். இதில், எத்தனை சதவீதம் உண்மை உள்ளது என தெரியவில்லை . படம் வெளியாகி வெற்றியடைந்தால் தான் இயக்குநரின் பழிவாங்கும் கனவு நிறைவேறும் என்றும் அப்போது தான் அந்த நடிகர் ஃபீல் செய்வார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











