அப்பா போட்ட ஆர்டர்.. ஆள் அட்ரெஸ் இல்லாமல் அப்ஸ்காண்ட் ஆன பிரம்மாண்டத்தின் வாரிசு.. என்ன ஆச்சு?

By Staff

சென்னை: சினிமாவே வேண்டாம் என அப்பா சொல்லியும் கேட்காமல் அடம்பிடித்த நிலையில், வாரிசை பெரிய படத்தில் அறிமுகம் செய்ய பிரம்மாண்ட இயக்குநர் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த சந்தோஷத்தில் மிதந்த வாரிசு சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், அந்த பிரம்மாண்டத்தின் வாரிசு திடீரென ஒரு மாத காலமாக ஆள் அட்ரஸே காணாமல் அப்ஸ்காண்ட் ஆகி உள்ளார். இதற்கு பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து கோடம்பாக்கத்தில் பரவலாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

பிரம்மாண்டத்தின் வாரிசு

பிரம்மாண்டத்தின் வாரிசு

நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் வாரிசுகள் சினிமா உலகை வெகுகாலமாக ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த வாரிசாக பிரம்மாண்டத்தின் வாரிசு சினிமாவில் நடிச்சா ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்க, பாசக்கார தந்தை வேறு வழியில்லாமல் பச்சைக் கொடி காட்டி விட்டார்.

படிக்க வைத்தும்

படிக்க வைத்தும்

நல்ல படிப்பை படிக்க வைத்து மக்களுக்கு சேவை செய்வார் என தந்தை காத்திருந்த நிலையில், அதே ரத்தம் அப்படித் தான் இருக்கும் என சினிமாவை நோக்கி சிறகடித்து அந்த பறவை பறந்து வந்து விட்டது. பெரியளவிலான அறிமுக நிகழ்ச்சியை அப்பா நடத்திக் கொடுக்க சந்தோஷத்தில் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் செம கனெக்ட் ஆனார் அந்த வாரிசு.

ஏகப்பட்ட ட்ரோல்

ஏகப்பட்ட ட்ரோல்

கவர்ச்சிகரமாக போட்டோக்களை போட்டு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சம்பாதிக்க போகிறேன் என சவால் விட்டு போட்டோக்களை போட ஆரம்பிக்க அதிகப்படியான ட்ரோல்களை சம்பாதிக்க ஆரம்பித்தார் அந்த வாரிசு. ஆனால், அதையெல்லாம் சமாளித்துக் கொண்டிருந்தவருக்கு அதை விட பெரிய பிரச்சனை ஒன்று வந்ததால் தான் இந்த அமைதிக்கு காரணம் என்கின்றனர்.

அந்த சூப்பர் மாடல்

அந்த சூப்பர் மாடல்

தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொண்டு தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிட்டு சிக்கிய அந்த ரியாலிட்டி ஷோ நடிகை தான் பிரம்மாண்டத்தின் வாரிசு பற்றியும் தேவையில்லாத பேச்சுக்களை சமூக வலைதளங்களில் பேசி இருந்தார். இந்த விஷயம் பிரம்மாண்டத்தின் காது வரைக்கும் எட்டி விட்டதாம்.

ஆர்டர் போட்ட அப்பா

ஆர்டர் போட்ட அப்பா

சினிமாவில் உன்னை எப்படி பிரபலப்படுத்த வேண்டும் என்பதை நான் தான் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறேனே? ஏன் தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் நேரம் செலவழித்து கண்டவர்களிடம் பேச்சு வாங்கிக் கொள்கிறாய் என கண்டித்த நிலையில், தான் மகள் அமைதியாக அந்த பக்கமே தலை வைத்து படுக்காததற்கு காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X