நீயெல்லாம் ஒரு நடிகனா.. டைட்டில் ஹீரோவையே வச்சு செஞ்ச காவிய பட இயக்குநர்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: பிரம்மாண்ட காவிய படத்தை இயக்கி வரும் அந்த பிரபல இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலே டைட்டில் ஹீரோவை கடுமையாக திட்டி இருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சாக்லேட் பாயாகவும் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் நடித்து வந்த அந்த வெற்றி ஹீரோ முதல் முறையாக மல்டி ஹீரோ படத்தில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார்.

ஆனால், கடைசி நேரத்தில் அந்த வெற்றி ஹீரோ செய்த ஒரு செயல் இயக்குநரை ரொம்பவே கடுப்பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஹேட்டர்கள் இல்லை

ஹேட்டர்கள் இல்லை

பல பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வந்தாலும் ஹேட்டர்கள் இல்லாமல் அனைத்து பிரபலங்களின் ரசிகர்களும் ரசித்து பார்க்கும் நபராகவே அந்த நடிகர் இதுவரை திரையுலகில் கலக்கி வருகிறார். மேலும், எந்த நடிகருடனும் இவருக்கு போட்டி போன்ற விவாதங்கள் ஏதும் வராத அளவுக்கு பார்த்துக் கொள்வதே இவரது வெற்றியின் ரகசியம்.

நல்ல நடிப்பு

நல்ல நடிப்பு

கொடுக்கப்படும் பாத்திரங்களில் தனது முழு பங்களிப்பை அளித்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி நல்ல நடிப்பால் ஏகப்பட்ட ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கொடுத்து வருகிறார் அந்த வெற்றி ஹீரோ. இந்நிலையில், பெரிய படத்தில் அவர் கமீட் ஆகி இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

காவிய படம்

காவிய படம்

புத்தக பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான அந்த காவிய புனைவு படத்தில் டைட்டில் ரோலில் வெற்றி ஹீரோ நடித்து வருகிறார். கோலிவுட்டின் பல முன்னணி நடிகர்கள் இணைந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அசத்தலாக முடித்தார்

அசத்தலாக முடித்தார்

தனது போர்ஷனை அசத்தலாக முடித்துக் கொடுத்து இயக்குநரின் ஒட்டுமொத்த பாராட்டுக்களையும் அள்ளிய அந்த நடிகர் அதற்கு பிறகு செய்த ஒரு செயல் இயக்குநரை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அப்படி அந்த வெற்றி ஹீரோ என்ன செய்தார் என்கிற விஷயமும் வெளியாகி உள்ளது.

கெட்டப் சேஞ்ச்

கெட்டப் சேஞ்ச்

பெரும் பொருட் செலவில் காவிய படத்தை எடுத்து வரும் நிலையில், அந்த படம் வெளியாவதற்குள் அடுத்த படத்தை ஆரம்பித்த வெற்றி ஹீரோ தனது சிகை அலங்காரத்தை டோட்டலாக மாற்றி கெட்டப் சேஞ்ச் செய்துள்ளாராம். ஏதாவது பேட்ச் வொர்க் தேவை பட்டால் இவரை வைத்து எப்படி எடுப்பது என இயக்குநர் கடுப்பாகி திட்டி உள்ளார்.

நீயெல்லாம் ஒரு நடிகனா

நீயெல்லாம் ஒரு நடிகனா

செட்டில் சக ஹீரோக்கள் இருக்கும் போதே பலரது முன்னிலையிலும் ஹீரோவின் புதிய கெட்டப் சேஞ்சை பார்த்த இயக்குநர் "நீயெல்லாம் ஒரு நடிகனா" என்கிற கேள்வியை எழுப்பி வெற்றி ஹீரோவை அசிங்கப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக ஹீரோ மிகவும் வருத்தம் அடைந்துள்ளாராம். அனுபவம் வாய்ந்த இய்க்குநர் என்பதால் எல்லாம் திட்டமிட்டு சரியாக முடித்திருப்பாரே என்று அடுத்த படத்திற்காக மாறிய நிலையில், ஹீரோ இப்படியொரு சிக்கலில் சிக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X