பரிதாப நிலைக்கு சென்ற பிரபல இயக்குநர்.. காரணம் பிரைட் நடிகர் தானாம்.. சம்பளத்தையே கொடுக்கலையா?
சென்னை: பிரைட் நடிகரை வைத்து கடைசியாக படம் எடுத்த அந்த பிரபல இயக்குநருக்கு அதுவே கடைசி படம் ஆகிவிட்டது எனக் கூறுகின்றனர். முன்னணி நடிகர்களை வைத்து பெரிய பேனரில் படங்களை எடுத்து வந்த இயக்குநர் தற்போது ஃபீல்ட் அவுட் ஆகி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் என பகீர் கிளப்புகின்றனர்.
நடிகர்கள் பல கோடிகளை சம்பளமாக கேட்டு தங்களுக்கு பெரிய மார்க்கெட் இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். சக நடிகர்களுக்கு போட்டியாக மார்க்கெட்டே இல்லை என்றாலும் தயாரிப்பாளர்களை டார்ச்சர் செய்து பட்ஜெட்டை எகிற வைத்து இயக்குநர்கள் தலையில் இடியை இறக்கி விடுகின்றனர்.

அந்த வேலையை தான் சில ஆண்டுகளுக்கு முன்னதாக பிரைட் நடிகரும் அந்த பிரபல இயக்குநருக்கு பார்த்து விட்டார் என பரபரப்பு பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
மண் சார்ந்த படங்கள்: கிராமத்து அழகை தனது படங்களில் காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை கவந்தவர் அந்த பிரபல இயக்குநர். தொடர்ந்து வெற்றிப் படங்களை குறைந்த பட்ஜெட்டில் கொடுத்து வந்தவர் பிரைட் நடிகரின் தம்பியை வைத்து எடுத்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. உடனடியாக அந்த இயக்குநரை புக் செய்து விட வேண்டும் என நினைத்த பிரைட் நடிகர் அந்த இயக்குநருக்கு வாய்ப்பு கொடுப்பதாக நினைத்துக் கொண்டு வாழ்க்கையையே கெடுத்து விட்டதாக தற்போது ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மார்க்கெட்டே இல்லை: அந்த நடிகருக்கு பெரிய மார்க்கெட் இல்லாத நேரத்தில் பெரும் பட்ஜெட்டில் படம் எடுத்து தான் தவறு செய்து விட்டார் என்கின்றனர். ஆனால், மொத்த பழியும் இயக்குநர் தலையில் விழுந்த நிலையில், அவரது வாழ்க்கையே தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.
சம்பளத்தில் கை வச்சுட்டாங்க: பிரைட் நடிகர் படத்தை செய்த இயக்குநருக்கு படத்தின் தோல்வி காரணமாக தயாரிப்பு நிறுவனம் சம்பளத்தில் கை வைத்து விட்டதாக கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக புதிய பட வாய்ப்புகளும் அந்த இயக்குநருக்கு கிடைக்காத நிலையில், பணத்துக்கே தற்போது கஷ்டப்படும் நிலைக்கு அவர் வந்து விட்டதாகவும் சில நடிகர்களிடம் பண உதவி வாங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











