டாப் நடிகர்களே வேண்டாம்.. தலை தெறிக்க ஓடும் பிரபல டைரக்டர்.. நண்பர்கள் 2 பேரும் கொடுத்த அடி அப்படி?

By Staff

சென்னை: சினிமாவில் எப்படியாவது நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று பல இயக்குநர்கள் முதல் படத்தை சாதாரண நடிகர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கிடைத்தால் கூட போதும் என வைத்து தங்களது திறமையை கொட்டி சூடான சுவையான கல்யாண வீட்டு பிரியாணி போல கிண்டிக் கொண்டு வந்துக் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து விடுவார்கள்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க, நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டாக்கர் டைரக்டரா? எங்கே என்ன வைத்து ஒரு நல்ல படத்தை எடுத்துக் காமி என வாய்ப்பு தருவது போல தந்து டைரக்டர்களை சில டாப் நடிகர்கள் முடித்து விடும் வேலையை சிறப்பாக செய்து வருவது தான் சினிமாவுக்கே கிடைத்த சாபம் என்று கோலிவுட்டில் பலரும் காது படவே பேசத் தொடங்கிவிட்டனர்.

Popular Director tired of directing soul less commercial movies with Top Actors
Photo Credit:

அதிலும், 2 முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்து படாத பாடு பட்ட இயக்குநர் இனிமேல் சினிமாவே வேண்டாம் என தலைதெறிக்க ஓடும் நிலைக்கு வந்துவிட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

கமர்ஷியல் குப்பைகள்: தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் தரமான படங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை விட எப்படியாவது அதிக வசூலை ஈட்டி விட வேண்டும் என்பதற்காக நல்ல படங்களை இயக்கும் இயக்குநர்கள் கூட இந்த படம் ஆர்ட் படம் கிடையாது, அவார்ட் படம் கிடையாது, நானெல்லாம் நல்ல படம் தருவேன்னு நினைக்காதீங்க, அதே கமர்ஷியல் குப்பை தான் என கூவி கூவி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் அதே கமர்ஷியல் குப்பைகளை மட்டுமே பல ஆண்டுகளாக கிண்டிக் கொண்டு தாங்கள் தான் தலைசிறந்த நடிகர்கள் என்றும் சினிமாவையே தாங்கிப் பிடிப்பதாகவும் தங்களுக்குத் தாங்களே புகழாரம் பாடிக் கொள்(ல்)கின்றனர்.

நண்பர்கள் கொடுத்த மரண அடி: இப்படியொரு இயக்குநரா என ஆரம்பத்தில் வியந்து பார்க்கப்பட்ட ஒரு இயக்குநர் இப்போ இருக்காரா? என்கிற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டனர் அந்த டாப் நண்பர்கள் என பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருத்தர் வரிசையாக படங்களை எடுக்க வைத்து தான் ஒரு இயக்குநரா? என்கிற சந்தேகத்தையே அந்த டைரக்டருக்கு கொடுத்து விட்டாராம். இன்னொருத்தர் படத்தை எடுத்து வைத்து விட்டு வெளியிட விடாமல் இருக்கும் பஞ்சாயத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கழண்டுக் கொள்ள படம் வெளி வராத நிலையில், அடுத்த படத்துக்கு நகர முடியாமல் டைரக்டர் மனதளவில் உடைந்து போயுள்ளார் என்கின்றனர்.

வேண்டவே வேண்டாம்: இவர்கள் போதாது என அடுத்ததாக நீங்க ரொம்ப நல்லவரு என ஒல்லி நடிகர் சைக்கிளில் சைத்தான் போல ஏற, ஐயோ வேண்டவே வேண்டாம் என்றும் முன்னணி நடிகர்களை வைத்தே படம் பண்ணப் போவதில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன் என தலைதெறிக்க ஓடிவிட்டார் அந்த இயக்குநர் எனக் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X