60 நாள் மட்டுமே அமைதியா இருந்த மாஸ் நடிகர்.. அந்த இயக்குநர் அப்செட்டாக காரணமே அதுதானா?
சென்னை: இந்த முறை முழுவதுமாக தன்னுடைய படமாக இருக்க வேண்டும் என ஏற்கனவே மாஸ் நடிகருக்கு ரெக்வஸ்ட் வைத்து விட்டுத் தான் இந்த படத்தை இயக்கவே ஆரம்பித்தாராம் அந்த இயக்குநர்.
ஆரம்பத்தில் வெளி மாநில படப்பிடிப்புகளின் போது தனது அல்லக்கைகளை கூட கிட்டே நெருங்க விடாமல் விட்டு விட்டுத் தான் ஒட்டுமொத்தமாக இயக்குநர் பேச்சைக் கேட்டு நடிகர் நடித்து வந்தார் என்றும் ஆனால், 60 நாட்கள் முடிந்து மீண்டும் சொந்த மண்ணில் ஷூட்டிங் நடத்தும் போது இயக்குநருக்கு ஏகப்பட்ட பிரஷர் நடிகரை சுற்றியிருந்தவர்கள் கொடுக்க ஆரம்பித்ததாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகரின் லுக், டிரெஸ் என ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குநர் ஒரு ஐடியா வைத்திருந்த நிலையில், உள்ளே புகுந்தவர்கள் திணித்த விஷயங்களை நடிகர் கன்ட்ரோல் பண்ணாமல் கண்டுக்காமல் விட்ட நிலையில், தான் இயக்குநர் தனது இஷ்டத்துக்கு இந்த படத்தை பண்ண முடியவில்லையே என்கிற வருத்தத்தில் படத்தை விட்டே வெளியேறும் முடிவுக்கே சென்று விட்டதாக கூறுகின்றனர்.
60 நாளுக்கு பிறகு ஆட்டம்: முதல் 60 நாள் இயக்குநர் இருந்த எனர்ஜியே வேறலெவலில் இருந்ததாகவும் அடுத்து 60 நாட்கள் இயக்குநருக்கு தினம் தினம் புதிய புதிய டார்ச்சர்கள் மற்றும் தொல்லைகள் வந்து குவிந்து கொண்டே இருந்த நிலையில், இரண்டாம் பாதியை நினைத்தது போல எடுக்க முடியவில்லை எனக் கூறுகின்றனர்.
கடந்த முறையும் இதே போலத்தான் இயக்குநரை கடைசி நேரத்தில் நடிகரின் தரப்பு கட்டையை போட்டதாகவும் இந்த முறை அந்த பிரச்சனை இருக்காது என வாக்கு கொடுத்து விட்டு கடைசி நேரத்தில் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ தம்பி என நடிகரே சொன்ன நிலையில், தான் இயக்குநர் ஒட்டுமொத்தமாக அப்செட் ஆகி விட்டார் என்கின்றனர்.
அப்செட்டான இயக்குநர்: நடிகரின் சொந்த பிரச்சனை, அரசியல் பிரச்சனை என ஏகப்பட்ட பிரஷர்களையும் இயக்குநர் பக்கம் திருப்ப பார்த்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்த படத்தை விட்டே விலகி விடுகிறேன் என்றே சொல்லி விட்டதாகவும் இன்னொரு இயக்குநரை வைத்து முடித்துக் கொள்ளுங்கள் என சொல்ல நடிகர் இயக்குநரை அழைத்து கூல் செய்ய வேண்டா வெறுப்பாகவே படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார் என்றும் எந்தவொரு விஷயத்திலுமே முழுசா இறங்கி இயக்குநர் வேலை செய்யவில்லை என்றும் கூறுகின்றனர்.
அடுத்த படத்தில் கவனம்: அடுத்து பெரிய பட வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த படத்தையாவது தனக்கு பிடித்தது போல எடுக்க வேண்டும் என அந்தப் பக்கம் தனது முழுமையான கவனத்தை இயக்குநர் செலுத்தி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications