Don't Miss!
- News
ஈரோட்டில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்பட 5 பேர் தப்பினர்.. என்னாச்சு?
- Sports
கோலி தந்த ஐடியா தான் அது.. நியூசி,யின் மிடில் ஆர்டரை சுருட்டியது எப்படி?.. ஷர்துல் சுவாரஸ்ய பதில்!
- Lifestyle
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Technology
4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
- Finance
ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
நடிப்பே வராத நடிகை.. தலையை பிய்த்துக் கொள்ளும் இயக்குநர்.. ஆளையே மாத்த முடிவாம்?
சென்னை: பார்க்க ரொம்பவே அழகாக இருக்கிறார் என அந்த நடிகையை தொடர்ந்து கோலிவுட் படங்களில் ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் அந்த நடிகையை புக் செய்து விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் இருந்து ஆக்டிங்கை வாங்குவதற்குள் அந்த இயக்குநர் படாதபாடு பட்டு வருகிறார் என பேச்சுக்கள் லீக் ஆகி உள்ளன.
இந்நிலையில், கடுப்பின் உச்சிக்கே சென்ற இயக்குநர் அதிரடியாக அந்த காரியத்தையே செய்யவும் முடிவெடுத்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
படமே ஓடல.. 35 கோடி.. 40 கோடி என வாய்க்கூசாம கேட்கிறாங்களே.. போட்டி நடிகர்களால் புலம்பும் கோலிவுட்!

போட்டோஷூட் பீஸ்
போட்டோஷூட்டில் செம அழகாகவும் கவர்ச்சியாகவும் பலரையும் கவர்ந்திழுக்கும் அந்த மலையாள தேசத்து நடிகைக்கு கொஞ்சம் கூட நடிக்க வரவில்லை என்கிற பேச்சு ஒட்டுமொத்த சினிமா உலகிலும் அடிபட்டு வருகின்றன. வெறும் பிகினி போட்டோஷூட்டுக்கு மட்டும் தான் இவர் லாயக்கு என்றும் கிளாமர் ரோல்களை தாண்டி கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை எல்லாம் கொஞ்சமும் தாங்க மாட்டார் என பலரும் சொல்லியும் கேட்காமல் அந்த நடிகையை பிரபல இயக்குநர் சமீபத்தில் புக் செய்தார்.

இன்னொரு நடிகை அசத்தல்
அதே படத்தில் இன்னொரு பிரபல நடிகையும் நடித்து வரும் நிலையில், சிங்கிள் டேக்கில் அனைத்து காட்சிகளையும் நடித்து அசத்தி வருகிறாராம். இயக்குநரையே அவரது நடிப்பால் பல இடங்களில் பிரம்மிக்க வைத்துள்ளார். ஆனால், அதே நேரம் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் இன்னொரு நடிகையால் ஸ்பீடு பிரேக்கரில் ஏறும் லாரி போல ரொம்பவே ஸ்லோவாகி வருவதால் இயக்குநர் டென்ஷன் ஆகி உள்ளார்.

நடிப்பே வரல
நான்கு முதல் ஐந்து டேக்குகள் ஒவ்வொரு ஷாட்டுக்கும் எடுத்துக் கொண்டாலும், இயக்குநர் எதிர்பார்க்கும் அளவுக்கு ரியல் எக்ஸ்பிரஷன் அந்த நடிகையிடம் இருந்து வரவே இல்லையாம். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் கூட ஒன்றிரண்டு டேக்குகளில் நடித்து முடிக்கும் நிலையில், ஹீரோயினாக போட்டுள்ள நடிகையிடம் இருந்து எக்ஸ்பிரஷன்ஸ் வராதது இயக்குநரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது என்கின்றனர்.

அதிரடி மாற்றம்
ஏற்கனவே அந்த நடிகை நடித்த எந்தவொரு தமிழ் படத்திலும் அவர் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக ஒரு காட்சியில் கூட நடித்திருக்க மாட்டார். பதிலுக்கு அவர் வசனம் பேசிய காட்சிகள் ட்ரோல் மெட்டீரியல் ஆனது தான் மிச்சம். இந்நிலையில், படத்தில் இருந்து அந்த நடிகையை தூக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை போடலாம் என்கிற முடிவுக்கே வந்திருக்கிறாராம் அந்த இயக்குநர் என்கிற அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

நடிப்பு பயிற்சி
எப்படியாவது இந்த ஃபீல்டில் சாதிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் களமிறங்கி உள்ள அந்த ஹீரோயின் நன்றாக நடிக்க வேண்டும் என்பதற்காக தனியாக நடிப்பு பயிற்சி எல்லாம் மறைமுகமாக எடுத்து வருவதாகவும் பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் புகைந்து வருகின்றன.