என்ன சார் உங்க அண்ணன் இப்படி பண்ணிட்டாரே.. தம்பியிடம் புலம்பித் தள்ளிய இயக்குநர்.. என்ன ஆச்சு?
சென்னை: அந்த இயக்குநரை முதலில் நடிகராக்கி அழகு பார்த்தது எல்லாம் வீணாகப் போயிடுச்சே என சமீபத்தில் செட்டில் தம்பியிடம் அந்த இயக்குநர் ரொம்பவே மனம் விட்டு தனது வேதனையை புலம்பித் தள்ளி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.
ஆதிக்க சாதியை எதிர்க்கும் விதமான படத்தில் தான் முதன் முதலில் அந்த இயக்குநர் நடித்திருந்தார்.
ஆனால், அதற்குள் இப்படியொரு படத்தில் அந்த இயக்குநர் ஹீரோ வாய்ப்பு வந்த ஒரே காரணத்திற்காக சம்மதிப்பார் என்பதை கொஞ்சம் கூட அந்த இயக்குநரால் ஜீரணிக்க முடியவில்லை என பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சைக்கோ இயக்குநர்
ஆரம்பத்தில் அந்த இயக்குநர் எடுத்த சில சைக்கோத்தனமான படங்கள் எல்லாம் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், அவரது சைக்கோத்தனம் உச்சத்துக்கு சென்று நிர்வாண காட்சிகள் வரை படங்களில் வைக்க ஆரம்பித்ததும், ச்ச்சி.. ச்ச்சீ.. இந்த பழம் புளிக்குது என ரசிகர்கள் அவர் படங்களை வெற்றிப் படங்களாக மாற்றாமல் தியேட்டருக்கு சென்று பார்ப்பதையே தவிர்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஒண்ணுமே ஓடாது
அதன் பிறகு அவரும் தனது மூளையை கசக்கிப் பிழிந்து பல படங்களை எடுத்துப் பார்த்தார். ஆனால், ஒரு படமும் தேறவில்லை. ஹாலிவுட் படங்களை அப்படியே காப்பி அடித்து தானே சொந்தமாக சிந்தித்து உருவாக்கிய படங்கள் என பாரம்பரிய டச் உடன் சில படங்களை கொடுத்தும் யாரும் அந்த இயக்குநர் படத்தை சீண்டவில்லை. பெரிய நடிகர்கள் எல்லாம் அந்த இயக்குநர் பக்கம் போவதையே நிறுத்தி விட்டனர். தம்பியும் தொடர்ந்து ஒதுக்கி வந்த நிலையில், சமீபத்தில் பாவப்பட்டு வாய்ப்புக் கொடுத்து தேவையில்லாமல் தனது லிஸ்ட்டில் எக்ஸ்ட்ரா ஒரு தோல்வி படத்தை தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.

காசுக்காக தொழிலை மாற்றி
ஒண்ணுமே ஓடாது என்கிற நிலைக்கு வந்த அந்த இயக்குநர், குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே என காசுக்காக தனது இயக்கும் தொழிலை விட்டு விட்டு நடிக்க வாய்ப்புத் தேடி அலைந்தார். அப்போது தான் அந்த அறிமுக இயக்குநர் இயக்கி வந்த உமன் சென்ட்ரிக் படத்தில் ஆதிக்க சாதியின் ஆட்டத்திற்கு எதிரான படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அந்த இயக்குநரை அறிமுகப்படுத்தினார்.

அப்படியொரு ரோல்
நடிகைக்கு பக்கத் துணையாக இருந்து கடைசி வரை ஆணவம் நிறைந்த ஆதிக்க சக்தியினரை வதம் செய்யும் காட்சியில் எல்லாம் அந்த நடிகர் நடித்து விட்டு, அந்த படத்துக்கும் அந்த இய்க்குநரின் கொள்கைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் அப்படியே எதிர்மறையான கொள்கை கொண்ட இயக்குநரின் படத்தில் ஹீரோ வாய்ப்பும் நல்ல சம்பளமும் கிடைத்ததும் இப்படி மாறிவிட்டாரே அந்த இயக்குநர் என தம்பியை வைத்து இன்னொரு போராட்ட படத்தை இயக்கி வரும் இயக்குநர் ரொம்பவே ஃபீல் பண்ணி விட்டாராம்.

என்ன உங்க அண்ணன் இப்படி பண்ணிட்டாரே
தம்பியை வைத்து போராளி படத்தை பிசியாக இயக்கி வரும் அந்த இயக்குநர் சமீபத்தில் தான் அண்ணன் நடித்த படத்தை பார்க்க நேரத்தை ஒதுக்கி பார்த்து இருக்கிறாராம். படத்தை கொஞ்ச நேரம் பார்த்ததுமே ஆஃப் செய்து விட்டாராம். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த படம் குறித்து தம்பி நடிகரிடம் சில மணி நேரங்கள் பெரும் விவாதத்தையே அந்த இயக்குநர் மனம் தாங்காமல் புலம்பித் தள்ளி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போ அப்படி பேசினார்
என் கூட படம் பண்ணும் போது, எனக்கே தெரியாத பல விஷயங்களை அவர் எனக்கு சொன்னார். அப்போ அப்படி பேசிவிட்டு கொஞ்சம் கூட கொள்கையே இல்லாமல் இப்படியொரு படத்தை பண்ணும் அளவுக்கு அவருக்கு பணத் தேவை என்ன வந்தது என்றே தம்பியிடம் கேட்டு விட்டாராம் அந்த இயக்குநர்.

நானே பேசுவதில்லை
அந்த படத்தில் நடிக்கப் போவது தெரிந்த உடனே நானே வேண்டாம் என தடுத்தேன். நான் தொடர்ந்து நடிக்கும் படங்களும் கதாபாத்திரங்களும் அந்த படத்தை இயக்கும் இயக்குநரின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பதால் ஒரு முறை எடுத்துச் சொன்னேன். ஆனால், அவர் கேட்கவில்லை. அதன் பிறகு அவரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டேன் என நடிகரும் தனக்கும் அண்ணனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை, அண்ணனால் ஏற்பட்ட தோல்வி உள்ளிட்ட அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications











