கடன் இருக்குன்னு சொல்லியே காசை கறக்கும் இயக்குநர்.. தயாரிப்பாளருக்கு எக்கச்சக்க பில் போடுறாராம்!
சென்னை: பிரபல இயக்குநர் ஒருவர் சமீப காலமாக ஃபுல் டைம் நடிகராகவே மாறிவிட்டார்.
தான் இயக்கிய சில படங்கள் ஹிட் அடித்த நிலையில், முன்னணி இயக்குநராக மாஸ் காட்டிட்டு இருந்த அவர், அடுத்தடுத்து இயக்கிய படங்கள் எல்லாமே படு தோல்வியை சந்திக்க ஆரம்பித்த நிலையில், பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டார்.
தேவையில்லாமல் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து சம்பாதித்து வைத்த காசை எல்லாம் படத்தில் முதலீடு செய்த நிலையில், மொத்தமாக மாட்டிக் கொண்டார்.

கழுத்தை தாண்டிய கடன்
தயாரிக்கும் படத்துக்கு வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கிய நிலையில் திருப்பித் தர முடியாத சூழலில் கடன் கழுத்தை எல்லாம் தாண்டி தலையையே மூடிவிட்ட அளவுக்கு எல்லை மீறி போனதால் இயக்குநர் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்பொது தான் இயக்குநர் கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் தலை காட்ட ஆரம்பித்தனர்.

நல்ல வருமானம்
படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் இவரது வித்தியாசமான முக பாவணைகள் ரசிகர்களுக்கு பிடித்துப் போன நிலையில், தொடர்ந்து நடிகராகவே மாறிவிட்டார் அந்த இயக்குநர். ஒவ்வொரு படத்திலும் நடிக்க ஏகப்பட்ட சம்பளம் கிடைக்க ஆரம்பித்ததும், இயக்கினாலோ, படம் தயாரித்தாலோ கூட இவ்வளவு வருமானம் வருவதில்லையே என நினைத்த அந்த இயக்குநரு ஃபுல் டைம் ஜாபாகவே நடிக்க இறங்கி விட்டார்.

எல்லா இடங்களிலும்
எங்கே சென்றாலும், எந்த படத்தை பார்த்தாலும், என்னடா டபரா செட் போலவே கூடவே அந்த இயக்குநரும் இருக்கிறாரே என ரசிகர்கள் கிண்டல் அடிக்கும் அளவுக்கு ரிலீஸ் ஆகும் அனைத்து படங்களிலும் எனக்கும் ஒரு சின்ன ரோல் கொடுங்க என ஒரு நாள் இரண்டு நாள் கால்ஷீட் கூட கொடுத்து நடித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

கடன் பிரச்சனையை சொல்லி கறக்குறாரு
ஆரம்பத்தில் தனக்கு அதிக கடன் சுமை இருப்பதாக சொல்லி தயாரிப்பாளர்களுடன் கூடுதல் தொகையை வாங்க ஆரம்பித்த அந்த இயக்குநர் இப்பவும் அதே பஞ்ச பாட்டை பாடியே தனியாக அதிக சொத்துக்களை சேர்த்து வருவதாக கோடம்பாக்க டீ கடைகளில் ஒரே பேச்சாக எழுந்துள்ளது.

சம்பள விஷயத்தில் கறார்
பாதி சம்பளத்தை அட்வான்ஸ் ஆக கொடுத்தால் தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே வருவேன் என்கிற அளவுக்கு சமீப காலமாக சம்பள விஷயத்தில் ரொம்பவே கறாராக அந்த இயக்குநர் செயல்பட்டு வருகிறார் என்றும் சில தயாரிப்பாளர்கள் அவர் மீது அதிருப்தியை அள்ளித் தெளிக்க ஆரம்பித்து விட்டனர். அவருக்கு போட்டியாக வேறு சில இயக்குநர்களும் படம் எடுக்க முடியாமல் நடிக்க வந்த நிலையில், அவர்களை புக் செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

எக்ஸ்ட்ரா பில்
சம்பளத்தை கூட தயாரிப்பாளர்கள் இயக்குநரின் நடிப்புக்காக கொடுத்து வந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அதற்கு மேலும், தனியாக எக்ஸ்ட்ரா பில் போட்டு வருகிறார் அந்த இயக்குநர் என்கிற புதிய பிரச்சனை தற்போது பூதாகரமாக கிளம்பி உள்ளதாம். கார், ரூம், காஸ்ட்யூம், அசிஸ்டன்ட் என பல விஷயங்களில் தயாரிப்பாளர்களின் பணத்தை கறந்து வருவதை அறிந்து உஷாரான சிலர் இயக்குநர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











