இதுக்கு மேல தயவு செஞ்சு நடிக்காதீங்க.. அந்த இசையமைப்பாளரிடம் டைரக்ட்டாவே சொன்ன பிரபலம்?
சென்னை: தொடர்ந்து நடிக்கிறேன் என்கிற பெயரில் அந்த இசையமைப்பாளர் ஏகப்பட்ட ஃபர்னிச்சர்களை உடைத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவரிடம் நேரடியாகவே ஒரு பிரபலம் இனிமேல் தயவு செஞ்சு நடிக்காதீங்க என சொல்லி விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
இசையில் கெட்டிக்காரரான அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் இருப்பதை விட ஹீரோ என்கிற கெத்தான இடம் மேல் தான் போதையாம். அதன் காரணமாகவே தொடர்ந்து நடித்து வருகிறார் என்கின்றனர்.

ஒரு சில படங்கள் கை கொடுத்த நிலையில், தொடர்ந்து சிறு பட்ஜெட் படங்களை எடுத்து லாபம் பார்த்து விடலாம் என்கிற மனக் கணக்குடன் கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைக்கும் பல தயாரிப்பாளர்களை காலி செய்து வருகிறாராம் அந்த இசையமைப்பாளர்.
நடிப்பே வரலை: சினிமாவில் முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்பதை உறுதியாக அந்த இசையமைப்பாளர் நம்பி பல விஷயங்களை சக்சஸ்ஃபுல்லாக செய்து அசத்தி வருகிறார். அதிலும், அவரது இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அதை வைத்துக் கொண்டே ஹீரோவாகவும் தன்னை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைத்த நிலையில், அவருக்கு பல படங்கள் நடித்தாலும் இன்னமும் நல்லா நடிக்கவே வரவில்லை என சினிமா வட்டாரத்தில் பலரும் முகத்துக்கு நேராகவே விமர்சித்து வருகின்றனர்.
ஒரு ஷாட் எடுக்க பல டேக்குகள்: பல படங்களில் நடித்து வந்தாலும் இன்னமும் ஒரு ஷாட் எடுக்க அந்த நடிகருக்கு பல டேக்குகள் ஆகின்றதாம். அந்த ஒரு டேக்கும் வேறு வழியில்லாமல் இயக்குநர் ஓகே சொல்லி வைப்பது தான் எனக் கூறுகின்றனர். சூட்டிங் ஸ்பாட்டிலேயே நடிகருக்கு பெரியளவில் மரியாதை இல்லை என்றாலும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் இந்த நடிகரை வைத்து ஹிட் கொடுத்து விடலாம் என தொடர்ந்து அவரை புக் செய்ய அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்கின்றனர்.
இனிமே நடிக்காதீங்க: சமீபத்தில், பிரபல விநியோகஸ்தர் ஒருவர் தொடர்ந்து அந்த நடிகரின் படத்தை வாங்கி வெளியிட்டு நஷ்டமடைந்த நிலையில், இதற்கு மேல் நடிக்க வேண்டாம் என்றே அவரிடம் சொல்லி விட்டாராம். ஆனால், அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டால் தனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாது என்றும் சீக்கிரமே வெற்றிக் கொடுப்பேன் என்கிற முயற்சியில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் அந்த இசையமைப்பாளர் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











