மனைவியை கழட்டி விட்டு கள்ளக்காதலில் ஈடுபட்ட நடிகர்.. அவரும் போனதால் இப்போ இயக்குநர் மனைவியா?
சென்னை: பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட வாரிசு நடிகர் இன்னொரு நடிகையுடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதை அறிந்த நடிகை கோபம் கொண்டு சண்டை போட நடிகையை அந்த நடிகர் மொத்தமாக விவாகரத்து செய்தே கழட்டி விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகையுடன் ரகசிய காதலில் ஈடுபட்ட வந்த அந்த நடிகர் சமீப காலமாக அந்த நடிகை இன்னொரு நடிகருடன் தொடர்பில் இருப்பதை அறிந்து அவரிடம் பழகுவதையும் விட்டு விட்டாராம்.

இந்நிலையில், தற்போஹு பிரபல இயக்குநரின் முன்னாள் மனைவியுடன் அந்த நடிகர் நெருங்கிப் பழகி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன.
பல மனைவிகளை தேடும் நடிகர்கள்: கோடிக் கணக்கில் காசு குவிவதால் நடிகர்கள் பல மனைவிகளை தேடும் பழக்கம் அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை இருப்பதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்து விழுந்தாலும், நடிகர்களும் நடிகைகளும் அந்த மேட்டரில் ரொம்பவே வீக்காகவே உள்ளனர்.
திருமணம் செய்துக் கொள்வது, விவாகரத்து செய்வது, மீண்டும் திருமணம், மீண்டும் விவாகரத்து என லிஸ்டு பெரிதாகிக் கொண்டே போகிறது. தனது குடும்பத்திலேயே ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்ததாக வரலாறே இல்லை என்பது போல வித்தியாசமான புகழுடன் வாழ்ந்து வந்து வரும் அந்த நடிகர் அந்த பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர் மட்டும் அப்படியெல்லாம் இல்லை என பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால், சமீபத்தில் நடிகைக்கும் இவருக்கும் இடையே நடைபெற்ற விவாகரத்தால் இவரது முகத்திரையும் கிழிந்தது.
கழட்டி விட்ட கள்ளக் காதலி: லட்டு மாதிரி டாப் ஹீரோயினே மனைவியாக அமைந்த நிலையிலும், பூந்திக்கு அலையும் புத்தி போல அந்த நடிகர் இன்னொரு நடிகையுடன் ரகசிய காதலில் ஈடுபட்டு வந்தது மனைவிக்கு தெரிந்து வந்த சண்டையில் தான் இருவரும் பிரிந்தனர் என்கின்றனர்.
ஆனால், நடிகருடன் அந்த நடிகை பழகியதே பட வாய்ப்புகளுக்காகத்தான் என்றும் தற்போது பாலிவுட்டில் பல பட வாய்ப்புகள் இன்னொரு நடிகருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அந்த நடிகைக்கு கிடைக்க மனைவியை கழட்டி விட்டு வந்த நடிகரை அந்த நடிகை டீலில் விட்டு டாட்டா காட்டிவிட்டு சென்று விட்டாராம்.

இயக்குநர் மனைவியுடன் பழக்கம்: இந்நிலையில், அடுத்த ஆளை தேடி வந்த இளம் நடிகருக்கு பிரபல இயக்குநரை விவாகரத்து செய்து பிரிந்து சென்ற மாஜி மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு வருவதாகவும், இருவரும் பல இடங்களுக்கு சமீப காலமாக ஒன்றாக சென்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இருவரும் வெறும் நட்பாக மட்டுமே பழகுகின்றனரா? அல்லது அதையும் தாண்டிய உறவு மலருமா என்பது விரைவில் தெரியும் என்கிற திடுக்கிடும் தகவல்கள் சினிமா வட்டாரத்தையே வாட்டி வதைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











