பிரம்மாண்டத்தை நம்பி ஏமாந்த வாரிசு நடிகர்.. தன்னோட படமும் டோட்டல் டேமேஜ் தானா என ஓவர் ஃபீலிங்?

By Staff

சென்னை: பாஸ் நடிகர் படத்தின் கிளிம்ஸையே ரசிகர்கள் கிழித்துத் தொங்கப்போட்ட நிலையில், அந்த படத்துக்காக ரொம்ப வருஷமாக தன்னுடைய படத்தையும் இழுத்து அடித்து பழைய படமாக மாத்திட்டாரே பிரம்மாண்டம் என வாரிசு நடிகர் பயங்கர அப்செட் ஆகி விட்டாராம்.

டோலிவுட் பிரம்மாண்டத்திடம் நம்பி கொடுத்த படத்தை அவர் சர்வதேச அளவில் கொண்டு சென்று தனக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தார். ஆனால், இந்த பிரம்மாண்டம் டோட்டல் டேமேஜ் செய்து விடுவாரா என்கிற பயம் அந்த வாரிசு நடிகருக்கு தொற்றிக் கொண்டதாம்.

மேலும், பாஸ் நடிகரின் படத்தை பல விதமாக பிசினஸ் செய்ய பிளான் போட்டு வரும் பிரம்மாண்டம் தனது படத்தை கண்டுக்கவே இல்லை என்பதை புரிந்துக் கொண்டு சண்டை பிடிக்கவே ஆரம்பித்து விட்டதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

Popular Heir actor upset over big director continuously delay his dream project?

வாரிசு நடிகர் கடுப்பு: ஓவர் ஆசை உடம்புக்கு ஆகாது என்கிற ரீதியில் பிரம்மாண்டம் அடுத்தடுத்து அகல கால் வைக்க ஆசைப்பட்ட நிலையில், பழைய பன்னீர் செல்வம் எல்லாம் நீங்க இல்லைங்க என தொடர்ந்து 10 வருடத்திற்கும் மேலாக அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாம் பல்லை காட்டி வருகின்றன. இந்நிலையில், பிரம்மாண்டத்தை நம்பி கடந்த சில ஆண்டுகளாக சிக்கித் தவித்து வரும் வாரிசு நடிகர் எந்தவொரு அப்டேட்டும் இல்லையே என அப்செட் ஆகி விட்டாராம்.

பாட்டுக்கு மட்டும் பந்தா: பிரம்மாண்டம் படத்தை இயக்குவதை நிறுத்தி விட்டு சில வீடியோ ஆல்பங்களை மட்டும் உருவாக்கினாலே உலகளவில் சம்பாதிக்கலாம் என்றும் பாடல் காட்சிகளுக்கு செலவிடும் ஐடியாவையும் பணத்தையும் படத்திற்கு செலவிட்டால் நல்லா இருக்கும் என கடும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

பாஸ் நடிகரும் கோபம்: அப்டேட்டே போட்டதுமே சும்மா விநியோகஸ்தர்கள் லைன் கட்டி நிக்கப் போறாங்க என எக்கச்சக்க பிட்டு போட்டு பெரிய நடிகர்களை வைத்து குறளி வித்தை காட்டினாலும், கடைசியில் ரசிகர்கள் அடித்த அடியால் எழுந்து நிற்கவே முடியாத அளவுக்கு பிரம்மாண்டம் இமேஜ் விழுந்து உடைந்துள்ளது என்கின்றனர். ஏற்கனவே பல விஷயங்கள் பிடிக்காத நிலையில் தான் சண்டை வெடித்து நின்று போன அந்த படத்தை எப்படியாவது ரசிகர்களை ஏமாற்றி முதல் வார வசூலை வாரி விடலாம் என பிளான் போட்டுள்ளனர். என்ன ஆகப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X