பிரம்மாண்டம் போன் பண்ணா கூட அந்த ஹீரோ எடுக்குறதில்லையா?.. அந்தளவுக்கு மனுஷன் அப்செட் ஆகிட்டாரா?
சென்னை: பிரம்மாண்டத்தை நம்பி பல வருடங்கள் தன்னை ஒப்படைத்த நடிகருக்கு கடைசியில் அல்வா கிடைத்தது தான் மிச்சம் என்றாகிவிட்டது. படப்பிடிப்பு நடக்கும் போதே ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் என இயக்குநர் ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி கொடுமைப்படுத்தும் போதே நடிகருக்கு இந்த படம் கை கொடுக்குமா? என்கிற டவுட் வந்துவிட்டதாம்.
கால தாமதம் ஆனாலே காலாவதி கேஸ் தான் என நினைத்த அவர் கிங் இயக்குநரை தொடர்ந்து இந்த இயக்குநரை நம்பி தலையை கொடுத்தால் பெரிய வெற்றி மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் என கூடவே இருந்த சிலர் பிரைன் வாஷ் பண்ணதால் நம்பி ஏமாந்துவிட்டாராம்.

இயக்குநரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏகப்பட்ட இயக்குநர்களை வைத்து தன்னுடைய வேலைகளை அவர்கள் தலைமீது கட்டி படமெடுக்கிறேன் என்கிற பெயரில் ஓவர் பந்தா காட்டி நடிகரை ரொம்பவே ஏமாற்றியதெல்லாம் இப்போதுதான் புத்திக்கு எட்டியிருக்கிறதாம். படம் பெரிய தோல்வியை சந்தித்த பின்னர், இயக்குநர் போன் செய்தால் கூட அந்த கடவுள் பெயர் கொண்ட நடிகர் எடுப்பதில்லை என்கிற பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.
வெட்டி பந்தா: தன்னை விட சிறந்த இயக்குநர் இந்தியாவிலேயே இல்லை என்பது போல கூடவே பலரை உதவியாளராக வைத்துக் கொண்டு வீண் செலவையும் வெட்டி பந்தாவையும் செய்து வந்த இயக்குநருக்கு அடுத்தடுத்த தோல்விகளால் மக்கள் நன்றாகவே பாடம் புகட்டிவிட்டனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த இயக்குநர் பண்ண அட்டூழியத்தை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் அடக்கிக் கொண்டிருந்த கடவுள் நடிகர் தற்போது இயக்குநர் பற்றி சினிமா வட்டாரத்தில் ஏதாவது பேச்சை எடுத்தாலே கடுப்பாகி வேறு டாபிக் பேசுங்க என்று கூறி வருகிறாராம்.
போன் கூட எடுக்காத ஹீரோ: படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், ஹீரோவை சமாதானப்படுத்தும் விதத்தில் தனது அடுத்த பிரம்மாண்ட படத்தில் உங்களுக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை வைத்திருக்கிறேன் என்பதை சொல்வதற்காக கடந்த சில நாட்களாக இயக்குநர் நடிகரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியாமல் போய் வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. இயக்குநர் மீது அந்தளவுக்கு நடிகர் செம கடுப்பில் இருக்கிறாராம். இனிமேல் ஜென்மத்துக்கும் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என தயாரிப்பாளரிடமே திட்டவட்டமாக கூறியதாகவும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
அந்த ஹீரோவும் அலர்ட் ஆகிட்டாரு: இவர் மட்டுமின்றி இந்த படத்தின் படுதோல்வியை அறிந்துக் கொண்ட அந்த பாலிவுட் நடிகையின் கணவர் ஹீரோவும் உஷாராகி விட்டாராம். ஏற்கனவே இயக்குநரின் படத்தில் நடிக்க தலையை ஆட்டிய அவர் தற்போது கால்ஷீட் பிரச்சனை இருக்கு என தட்டிக் கழிக்க ஆரம்பித்துவிட்டதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











