பைசா அதிகம் வருது.. பஞ்சாயத்து பண்ணி ரிலீஸை தள்ளி வைத்த வாரிசு.. ஷாக்கான படக்குழு!

By Staff

சென்னை: மீண்டும் பழையபடி பல முன்னணி நடிகர்கள் படங்களை வாங்கி வியாபாரத்தை ஜோராக நடத்தி வருகிறார் அந்த வாரிசு.

எந்த படம் எப்போ ரிலீஸ் ஆகணும்னு என்பதை முடிவு செய்வதே அவர் தான் என்கின்றனர். இந்நிலையில், 'வி' நடிகர் படத்தின் வெளியீட்டுக்கு வேட்டு வைத்து விட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரே புலம்பித் தள்ளி வருகின்றனர்.

ஆனால், அனைத்தையும் சுமூகமாக பேசி பஞ்சாயத்தை முடித்து வைத்திருக்கிறாராம் அந்த வாரிசு.

பெரிய வசூலுக்கு பிளான்

பெரிய வசூலுக்கு பிளான்

இந்த முறை எப்படியாவது தனது இண்டஸ்ட்ரியின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் அனைத்து இடங்களிலும், யார் பெரிய கையோ அவர்களுக்கே படத்தைக் கொடுத்து வருகிறார் அந்த பாலிவுட் பிரபலம். தென்னிந்திய படங்கள் சமீப காலமாக கொடுத்த பெரிய அடிக்கு மருந்து தடவும் விதமாக அவர் எடுத்து வரும் முடிவுகளில் ஒன்றாக இங்கே அவரது படத்தை அந்த பிரபல வாரிசு கவனித்துக் கொள்கிறார்.

சரண்டர்

சரண்டர்

ஏற்கனவே அந்த வாரிசிடம் சரண்டரான ஒரு படத்துக்கு தற்போது ரிலீஸ் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு பெரிய படங்களையும் ஒரே நாளில் வெளியிட்டால், நமக்குத் தான் மிகப்பெரிய இழப்பு என்பதை உணர்ந்து கொண்ட வாரிசு இரு தரப்பினரையும் அமர வைத்து பஞ்சாயத்து நடத்தி இருக்கிறார். அந்த வடமாநில பிரபலம் கொஞ்சம் கூட இறங்கி வராமல் எனக்கு ஃபேவரா முடிச்சிக் கொடுங்கன்னு பேசி விட்டாராம்.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

இது பெரிய படம் பெரிய வசூலை குறிக்கோளாக வைத்து வெளியாக போகிறது. இந்நிலையில், உங்க படத்தை வெளியிட்டால், உங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம், சுமூகமாக முடிவெடுத்தால் யாருக்கும் பிரச்சனை வராது என வாரிசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து 'வி' நடிகர் பட தயாரிப்பாளர் பின் வாங்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பைசா அதிகம்

பைசா அதிகம்

சொன்ன தேதியில் படத்தை வெளியிட எவ்வளவு வேண்டுமானாலும், பைசா செலவு செய்ய அந்த பாலிவுட் பிரபலம் முடிவெடுத்த நிலையில், தான் வாரிசு அவர்களுக்கு சாதகமாக இந்த பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து இருப்பதாக கோடம்பாக்கத்தில் பரவலாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. பல நாட்களாக தள்ளிப் போய் வரும் அந்த படம் இந்த முறையாவது வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அல்வா தானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X