பயங்கர கடன் நெருக்கடியில் தமாஸ் நடிகர்?.. ஒல்லி நடிகரிடம் கெஞ்சிப் பார்த்தும் வேலைக்கு ஆகலையாம்!
சென்னை: தமாஸ் நடிகர் ஏற்கனவே அந்த படத்தால் பல பண நெருக்கடிக்கு ஆளான நிலையில், எப்படியாவது ரிலீஸ் செய்தால் போதும் அனைத்தையும் சரி செய்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தார்.
அடுத்த ஆண்டு எந்த பெரிய படமும் வெளியாகாத நிலையில், பண்டிகையை கொண்டாடிலாம் என நினைத்துக் கொண்டிருந்த நடிகருக்கு தற்போது நாலா பக்கமும் செக் வைக்கப்பட்டு இருப்பது பெரும் கஷ்டத்தை கொடுத்துள்ளது.

அதிலும், ஒல்லி நடிகர் ஒட்டுமொத்த சோலியும் முடித்து விட திட்டமிட்டு தற்போது கிளம்பியிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக அவருக்கு போன் போட்டு தமாஸ் நடிகர் கெஞ்சியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கழுத்துவரை கடன்: ஒரு பக்கம் ஹீரோவாக நடித்து பல கோடி சம்பளம் வாங்கி நல்லா தான் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த தமாஸ் நடிகர் என தெரிந்தாலும், தயாரிப்பு நிறுவனத்தை எந்தவொரு ஐடியாவும் இல்லாமல் ஆரம்பித்து ஏகப்பட்ட கடனில் வசமாக சிக்கிக் கொண்டார் என்கின்றனர்.
அடிமேல அடி: மேலும், சமீபத்தில் அந்த மியூசிக் நடிகர் இமேஜை ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்த நிலையில், இனிமேல் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படங்களில் நடிப்பது கஷ்டம் தான் என்றும் ஆக்ஷன் படங்களையே கொடுத்தால் ரசிகர்களும் கடுப்பாகி விடுவார்கள் என்றும் நடிகருக்கு இனிமேல் ஏகப்பட்ட சிக்கல் நேரடியாகவும் மறைமுகமாகவும் திரைத்துறையில் உருவாகும் என்றும் கூறுகின்றனர்.
கெஞ்சி கேட்டும்: தமாஸ் நடிகர் தரப்பில் இருந்து ஒல்லி நடிகர் தரப்புக்கு போன் மூலம் ரெக்வஸ்ட் சென்றதாகவும், அதே தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தும் அவர் கொஞ்சமும் காதில் வாங்காமல், என் படத்துக்கே சிக்கல் இதெல்லாம் தயாரிப்பு தரப்பு முடிவு தான். என்னால், எதுவும் செய்ய முடியாது என கையை விரித்து விட்டாராம்.
தப்பிக்குமா?: ஏற்கனவே பல ஆண்டுகள் காலாவதியான படமாக உருவாகி உள்ள அந்த தமாஸ் நடிகரின் படம் பண்டிகை காலத்தில் பல படங்களுடன் போட்டிப் போட்டால் தப்பிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கூட்டத்தோடு கூட்டமாக விடுமுறை நாட்களை பயன்படுத்தி வசூல் வந்தாலும், தியேட்டர்கள் குறைவாக கிடைக்கும் பட்சத்தில் முதலாவது கிடைக்குமா என்பது டவுட்டு தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











