பழைய ஃபார்முக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் இசையமைப்பாளர்.. உச்சகட்ட கோபத்தில் ஹீரோ!
சென்னை: ஆரம்பத்தில் தனக்கு இசையின் மூலம் ஹிட் கொடுத்தவராச்சே என நம்பி மீண்டும் அவரிடம் அந்த பொறுப்பை கொடுத்த நிலையில், சரியாக அந்த இடத்தில் தான் பிரச்சனை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து விட்டதை அறிந்ததும் நடிகர் டென்ஷன் ஆகி விட்டாராம்.
விரைவில் வெளியாக உள்ள அந்த பிரபல நடிகரின் படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வெளியான அந்த படக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் பிஜிஎம் சரியாக இல்லையே என ட்ரோல் செய்து வருகின்றனர்.

பட்டமே போயிடும் போல
அந்த இசையமைப்பாளர் எதற்கு பெயர் பெற்றாரோ அந்த பெயரே போய் விடும் போல இருக்கே என ரசிகர்கள் பலரும் புலம்பி வருகின்றனர். சமீப காலமாக அவர் இசை பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்றும் சுமார் ரகமாகவே உள்ளதற்கு என்ன காரணம் என்றும் புரியாமல் ரசிகர்கள் தவித்து வரும் நிலையில், ஏகப்பட்ட பிரபலங்களுடன் அந்த இசை பிரபலத்துக்கு பிரச்சனைகளும் உருவாகி வருகின்றன.

வேணாம்னு சொல்லிட்டார்
முன்னதாக டாப் நடிகரின் படத்தில் இவர் தான் அனைத்தும் என ரசிகர்கள் நினைத்து ஃபயர் எமோஜிக்களை விட்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் இசைக்கும் டாப் நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் ஓரங்கட்டப்பட்டார். அடுத்த படத்திற்கும் அந்த இசையமைப்பாளர் வேண்டாம் வேறு ஒருத்தரை பாருங்கன்னு நடிகர் சொன்னது பெரும் பரபரப்பை கிளப்பியது.

நம்பிய ஹீரோ
நமக்கு எப்படி இருந்தாலும், நல்லாத்தான் அவர் மியூசிக் போடுவாருன்னு ரொம்பவே நம்பிக்கையுடன் இந்த படத்தை கொடுத்த நிலையில், கடைசியில் ஒரே ட்யூனை ஒட்டுமொத்த படத்துக்கும் போட்டு வச்சிருக்காரு என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க ஆரம்பித்தது தெரிய வர நடிகர் ரொம்பவே கடுப்பாகி விட்டாராம். படம் வெளியாவதற்கு முன்பாக சில மாற்றங்களை செய்ய சொல்லலாம் என்று பார்த்தால் இசையமைப்பாளர் எப்பவோ எஸ் ஆகி விட்டாராம்.

ஜாலி டூர்
ஆனால், எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஜாலி டூர் அடிக்க உலகம் முழுவதும் புறப்பட்டு விட்டாராம் அந்த இசை பிரபலம். சமீப காலமாக ஹீரோக்களே தயாரிப்பாளர்கள் ஆகி வரும் நிலையில், அடுத்த கட்டமாக இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் மற்றும் ஹீரோ மற்றும் இசையமைப்பாளர்கள் மத்தியில் தான் சண்டை வலுத்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











