சரக்கு போட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த நடிகை.. இயக்குநருடனே வாக்குவாதம்.. கடைசியில் என்ன ஆச்சு?

By Staff

சென்னை: குடி போதைக்கு அடிமையான அந்த பிரபல நடிகை சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சரக்கு போட்டு வந்திருக்கிறார். ஹீரோவுடன் ரொம்பவே நெருக்கமாக ரொமான்ஸ் செய்வது போல எடுக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த ஹீரோயின் அப்படி வந்ததும் இயக்குநர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.

ஹீரோவுக்கு இந்த விஷயம் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்த அந்த இயக்குநர் தனது உதவி இயக்குநர்களை அனுப்பி ஏன் குடித்து விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார் என கேட்க சொல்லி அனுப்ப, உதவி இயக்குநரை நடிகை திட்டி அனுப்பி விட்டாராம்.

Popular heroine visits shooting spot in full drunken mode and fight with director?

உடனடியாக கோபம் கொண்ட இயக்குநர் ஹீரோயினிடம் தானே நேரடியாக சென்று கேள்வி எழுப்ப செட்டில் வாக்குவாதமே நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

ஓவர் போதை: நடிகை சொன்ன நேரத்தை தாண்டி இன்னமும் ஷூட்டிங்கிற்கு வரவில்லையே என நினைத்த இயக்குநர் அவரது உதவி இயக்குநர்கள் மூலமாக நடிகைக்கு தொடர்ந்து போன் செய்ய சொல்லி இருக்கிறார். தன்னால் இப்போதைக்கு வர முடியாது என நடிகை மறுத்த நிலையில், சீன் இருக்கு ஹீரோ வெயிட் பண்றாரு, நீங்க கண்டிப்பா வந்தே ஆக வேண்டும் என உதவி இயக்குநர் சொன்னதுமே, அப்படியே ஃபுல் போதையில் அந்த பிரபல நடிகை செட்டிற்கு வந்து விட்டாராம்.

வாக்குவாதம்: அட்வான்ஸ் வாங்கி விட்டு சரியாக கால்ஷீட்டுக்கு வருவதாக தானே அக்ரீமென்ட் போட்டு இருக்கீங்க, ஆனால், படப்பிடிப்பு நேரத்தில் இப்படி ஃபுல் போதையில் வந்தால் அந்த ஹீரோவுக்கு நான் என்ன பதில் சொல்றது என இயக்குநர் நடிகையை திட்ட இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

உள்ளே வந்த ஹீரோ: ஷூட்டிங் ஸ்பாட்டே பரபரப்பான நிலையில், கேரவனில் இருந்து ஹீரோவுக்கும் விஷயம் தெரிய வர அந்த இடத்துக்கு வந்து விட்டாராம். என்னால் இன்று வர முடியாது. மனசு சரியில்லை, ஓவராக குடித்திருக்கிறேன் என சொல்லியும் வரச்சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் அப்படியே வந்துட்டேன் என ஹீரோவிடம் அந்த ஹீரோயின் சொல்ல, இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வாங்க, வேற சீன் எடுக்கலாம் என இயக்குநரையும் அந்த இளம் ஹீரோ கூல் செய்து விட்டு நடித்ததாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X