அந்த பிரைட் நடிகரின் படமும் அனிமேஷன் தானா? திடீரென எழுந்த கேள்வி.. உண்மை என்ன தெரியுமா?
சென்னை: பிரம்மாண்ட அறிவிப்புடன் 3டி படங்கள் அறிவிக்கப்பட்டு பின்னர் அது குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமாக வருவதும் ரசிகர்களை ஏமாற்றுவதும் தொடர்கதையாக மாறி உள்ளன.
சமீபத்தில் பக்கத்து ஸ்டேட் நடிகரின் படம் அதே போல பில்டப் செய்யப்பட்டு தற்போது இதை ஒட்ட வைக்கத்தான் இத்தனை நாளா? என தூள் பாட்டி போல நெட்டிசன்கள் எட்டி உதைத்து செல்லும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில், பிரைட் நடிகரின் பிரம்மாண்ட 3டி படமும் இதே போன்ற அனிமேஷன் படம் தான் என சிலர் கொளுத்திப் போட்டுள்ளனர்.

ஹாலிவுட்டில் அனிமேஷன்
ஹாலிவுட்டில் அனிமேஷன் படங்களில் முன்னணி நடிகர்கள் நடிப்பதும், சில கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுப்பதும் வாடிக்கையான ஒன்று தான். அனிமேஷன் படங்களுக்கும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் அங்கே வழங்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் அனிமேஷன் படங்கள் கடந்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியும் பெற்று வருகின்றன. ஆனால், இங்கே தான் அது போன்ற படங்களை ரசிகர்கள் சண்டை என்கிற பெயரில் ட்ரோல் செய்ய தொடங்கி விடுகின்றனர்.

அடுத்ததும் அவுட்டா
பிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் நடித்து உலகளவில் பிரபலமான அந்த நடிகரை அதன் பின்னர் அந்த இயக்குநர் கண்டுக்கவே இல்லை. நடிகரும் பாலிவுட் இயக்குநர்கள் அழைப்பதை பார்த்து அப்படியே உயர பறக்க நினைத்து ஒவ்வொரு படமாக பல்பு வாங்கி வருகிறார். இந்நிலையில், ரிலீசுக்கு முன்பே அடுத்த படமும் அவுட் என்கிற பேச்சுக்கள் கிளம்பி விட்டன.

பிரைட் நடிகர் படமும்
இந்நிலையில், பிரைட் நடிகரின் 3டி படமும் இதே போலத்தான் அனிமேஷன் படமாக உருவாகி வருகிறது என்றும் அதனால், தான் வெகுவிரைவாக படத்தை முடித்து விட்டு அடுத்த படத்தில் நடிக்க நடிகரும் முடிவு செய்துவிட்டு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கொளுத்தி போட்டுள்ளனர்.

உண்மை என்ன
ஆனால், இது வெறுப்பு காரணமாக சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்படும் படத்தில் நடித்த நடிகரின் ரசிகர்கள் கொளுத்திப் போட்டது தான் என்றும் இது அனிமேஷன் திரைப்படம் இல்லை என சந்தேகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட சில விநியோகஸ்தர்களுக்கு படக்குழுவில் உள்ள முக்கிய புள்ளிகள் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஏமாற்றக்கூடாது
எப்படி வேண்டுமானாலும் எந்த நடிகர் வேண்டுமானாலும் படம் நடிக்கலாம். ஆனால், தனது ரசிகர்களையே அவர்கள் பிசினஸுக்காக பகடை காயாக மாற்றி ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால், அவர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய அடி தான் விழும் வெற்றி கிடைக்காது என்றும் தத்துவங்கள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











