கந்து வட்டி விட்டு சம்பாதிக்கும் பிரபல நடிகை.. கணவன் தான் கலெக்‌ஷன் ரவுடியாம்.. என்ன பொழப்பு?

By Staff

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கந்து வட்டி விட்டு சம்பாதித்து வருவதாக திரைத்துறையில் பரவலான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சினிமா தயாரிப்பாளர்கள் பலருக்கும் இவர் தான் ஃபைனான்ஸ் செய்து வருகிறாராம். அதுவும் ரகசியமாக என்கின்றனர். சரியாக பணத்தை தராத நபர்களை அசிங்கப்படுத்தி பணத்தை கறாராக வாங்கி வரும் கலெக்‌ஷன் பாய் வேலையை அவரது கணவரே செய்து வருவது தான் இதில் காலக்கொடுமை என்றும் கூறுகின்றனர்.

ரசிகர்களை மகிழ்விப்பதற்காக படம் எடுப்பதை தாண்டி சினிமாவில் சின்னதாக முதலீடு போட்டால் சில மாதங்களில் பெத்த லாபத்தை பார்த்து விடலாம் என்றே பல தயாரிப்பாளர்கள் கடனுக்கு பணம் வாங்கி தயாரிப்பாளர்கள் என்கிற போர்வையில் சுற்றி வருகின்றனர்.

gossip kollywood actress gossip

ஆனால், இது கரணம் தப்பினால் மரணம் என்கிற மர்ம விளையாட்டு என்பதை புரிந்துக் கொள்ளாமல் விளக்கை பார்த்த விட்டில் பூச்சிகளாக பலர் வந்து விழுந்து எரிந்து சாம்பலாகின்றனர் என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேராசைக்கார நடிகை: தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மலையாளத்தில் பெரிய வசதியான வீட்டில் வாக்கப்பட்ட அந்த நடிகை தனது கணவரின் சொத்துக்களையும், தான் சம்பாதித்து சேமித்து வைத்த பணத்தையும் சில ஆண்டுகளிலேயே பல மடங்கு அதிகரித்து விட்டார் என்கின்றனர். அதற்கு முக்கிய காரணமே கந்து வட்டி தொழிலில் அவர் இறங்கியது தான் என்கின்றனர்.

கந்து வட்டி: மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என வங்கிகளை விட அதிக வட்டிக்கு தயாரிப்பாளர்கள் கேட்கும் போதெல்லாம் பணத்தை உடனே தருவதாக கூறி அவர்களை வலையில் விழ வைத்து கடனாளியாக்கி அவர்களின் வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்களை அடித்து பிடுங்கி வருகிறார் அந்த நடிகை என பகீர் கிளப்பி வருகின்றனர்.

அரசியல் செல்வாக்கு: நடிகையிடம் சினிமா செல்வாக்கை தாண்டி அரசியல் ரீதியான செல்வாக்கு அதிகம் உள்ள நிலையில், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஏன் ஒரு சில பிரபல நடிகர்களே சொந்த தயாரிப்பில் படம் பண்ணும் ஆசையுடன் களத்தில் குதித்து அந்த நடிகையின் வலையில் சிக்கித் தவித்து வருவதாக கூறுகின்றனர். சட்டத்துக்கு புறம்பான தொழிலை நடிகை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்தி வருகிறார் என்றும் அவரது கணவரே கலெக்‌ஷன் ஆபீசராக இருந்து செயல்பட்டு வருவதால் சினிமா துறையில் பலரும் இந்த தம்பதியினரை வில்லன்களை போலவே பார்த்து வருவதாக கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X