அடக் கருமமே.. பிரபல நடிகர்களின் ரீல் அம்மா.. பப் பாத்ரூமில் பண்ண வேலை.. ரொம்ப நாறுது?

By Staff

சென்னை: சினிமா ஷூட்டிங் முடித்து விட்டு இளம் நடிகர்களும் நடிகைகளும் மட்டும் பப்புகளுக்கு சென்று குடி போதையில் கூத்தாடுவதில்லை. அதிகமாக சின்னத்திரை பிரபலங்களும், சீனியர் நடிகர்களும் தான் அந்த இரவு விடுதிகளை நிரப்பி வருவதாக கூறுகின்றனர்.

மாஸ் நடிகர் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த அந்த ஆன்ட்டி நடிகை சமீபத்தில் பப் பாத்ரூமில் செய்த செயல் அனைவரையும் அருவருக்க செய்து விட்டதாக கூறுகின்றனர்.

Popular Mom artist doing a bad behaviour at Pub Bathroom shocks Kollywood

பப்பும் பார்ட்டியும்: சினிமாவில் கொஞ்சம் காசு கிடைத்து விட்டாலே நடிகர்கள் ஒரே பப்பும் பார்ட்டியுமாகத்தான் பொழுதை கழித்து வருகின்றனர். அங்கே தான் பலருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கிறது என்றும் புதிய படங்களில் நடிக்க சான்ஸ் கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர். இளம் நடிகர்களை விட சீனியர் நடிகர்களின் சேட்டை தான் சமீப காலமாக அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

அம்மா நடிகை: பிரபல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமான அந்த நடிகை சமீபத்தில் பப்பில் போட்ட போதையாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், அவர் பப் பாத்ரூமில் பண்ண அந்த வேலை தான் இப்படியொரு பேச்சுக்கள் கிளம்ப காரணமே என்கின்றனர்.

ஓவர் குடி: பட வாய்ப்புகள் சமீப காலமாக சரியாக கிடைக்காத நிலையில், பப்பே கதியென அந்த நடிகை இருந்து வருகிறாராம். சமீபத்தில் ஒரு சனிக்கிழமை இரவு பப்பில் பயங்கர குடி போதையில் இருந்த அந்த நடிகை தலைக்கு ஏறிய போதை காரணமாக மயங்கி விழும் நிலைக்கு சென்றுள்ளார்.

பாத்ரூமில் பார்த்த வேலை: உடனடியாக பாத்ரூமுக்கு அவரை பவுன்சர்கள் அழைத்துச் சென்ற நிலையில், ஓவர் குடி காரணமாக மொத்தமாக வாந்தி எடுத்து பாத்ரூமை மட்டுமில்லை பப்பையே நாறடித்து விட்டாராம். அவர் போட்ட போதை ஆட்டத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் சிலர் சொல்லி சொல்லி சிரித்து அந்த நடிகையை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதற்கு மேல் அந்த பப் பக்கமே அவர் போக மாட்டார் என்றும் போனாலும், அவரை உள்ளே விடமாட்டார்கள் என்றும் கூறுகின்றனர். இந்த வயதில் இவ்ளோ குடி தேவையா? என்றும் அட்வைஸ் வேறு அந்த நடிகைக்கு பறக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X