அப்பா அரசியலுக்கு போயிட்டாரு.. அடுத்த ஹீரோவா அந்த பெரிய இடத்துப் பிள்ளை ரெடியாகுறாராம்.. அப்படியா?
சென்னை: திடீரென சினிமா விழாக்களில் அந்த பெரிய இடத்துப் பிள்ளை ஆஜராகி வருவது சினிமா வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களே அந்த நடிகரின் வாரிசை ஹீரோவாக்கும் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
சினிமாவில் பிரபலமான பின்னர் அரசியலுக்கு வந்தால் வளமான எதிர்காலம் உண்டு என்கிற பாதையை அப்பா ஏற்கனவே பக்காவாக போட்டு வைத்த நிலையில், அவரது வழித்தடத்தை மகனும் அப்படியே பின் தொடரப் போவதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இதுவும் நல்ல ஐடியா தான் என்று குடும்பத்தினரும் ஊக்கம் கொடுத்து வரும் நிலையில், தான் அடிக்கடி சினிமா விழாக்களில் இதுவரை தலைக்காட்டாமல் இருந்து வந்த அந்த பிரபலத்தின் வாரிசு பங்கேற்று வருகிறாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
அடுத்த ஜெனரேஷன்: சினிமா, அரசியல் என அனைத்திலும் அடுத்த ஜெனரேஷன் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. மாஸ் நடிகர் அரசியல் பக்கம் ஒதுங்க அவரது மகன் படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார். நடிகர்களின் வாரிசுகள் எல்லாம் சினிமாவில் கால் பதிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சில இயக்குநர்களின் வாரிசுகள் நடிகைகளாகவும் வலம் வருகின்றனர். இப்படியொரு சூழலில் நடிகராக இருந்து அரசியலுக்கு சென்ற நபரின் மகனும் வாலிப பருவத்தை எட்டிய நிலையில், அவரை சுற்றி ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியிருக்கிறது.
அடுத்த வாரிசு: சினிமா கோர்ஸை முடித்துவிட்டு வந்தால் அடுத்து அரசியல் கோர்ஸ் என அந்த பெரிய குடும்பத்தில் காலங்காலமாக தொடர்ந்து வரும் பாரம்பரியம் அடுத்த வாரிசு பக்கமும் தற்போது திரும்பியிருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன. அப்பாவை போலவே நடிகராக மகனும் ஆவாரா? என்கிற கேள்வியுடன் சில பிரபலங்களே அந்த அரசியல் பிரபலத்தின் வாரிசிடம் அப்ளிகேஷனை போட்டிருப்பதாக கூறுகின்றனர்.
இளம் ஹீரோ ரெடி?: சமீபத்தில் நடைபெற்ற அம்மாவின் பட விழாவில் அந்த நடிகரும் அரசியல்வாதியுமான நபரின் வாரிசு பங்கேற்ற நிலையில், அவருக்கு கிடைத்த வரவேற்பு தான் இதற்கு காரணம் என்கின்றனர். ஹீரோ போலவே இருக்கீங்க என சில பிரபலங்கள் சொல்ல அவரும் சீக்கிரமே இளம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாக அனைத்து வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். சீக்கிரமே நல்ல செய்தி வந்தாலும் வரும்.


Click it and Unblock the Notifications











