அந்த இயக்குநரை அரசியல் பக்கம் இழுக்க பலே திட்டம்.. அவருக்கும் அதுதான் ஆசையா?

By Staff

சென்னை: தொட்டதெல்லாம் ஹிட் ஆகி வரும் நிலையில், அந்த இயக்குநர் அடுத்து அரசியல் பக்கமும் தாவப் போகிறார் என்கிற பேச்சுக்கள் பூதாகரமாக கிளம்பி உள்ளன.

இயக்குநரின் ஆர்வத்தை பார்த்து பல அரசியல் புள்ளிகளும் அவருக்கு தூண்டில் போட்டு வருகிறார்களாம்.

அவரது அறிவாற்றல் தங்களுடன் இணைந்து செயல்பட்டால் பெரும் வெற்றியை பெறலாம் என பலரும் திட்டம் தீட்டி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சினிமாவும் அரசியலும்

சினிமாவும் அரசியலும்

சினிமாவில் இருந்து ஏகப்பட்ட ஆளுமைகள் அரசியலுக்கு சென்றுள்ளனர். சிலர் அதில் சிறப்பாக செயல்பட்டு முதல்வர் பதவியை கூட பிடித்துள்ளனர். ஆனால், பலர் ஏன் தான் அங்கே சென்றோம் என நினைக்கும் அளவுக்கு சொதப்பல்களையும் சோதனைகளையும் சந்தித்துள்ளனர். இங்கே இருந்திருந்தால் கூட மரியாதை கிடைத்திருக்கும். ஆனால், இப்போ அதுவும் போச்சு என புலம்பி வருகின்றனர்.

அரசியல் ஆர்வம்

அரசியல் ஆர்வம்

இந்நிலையில், ஹிட் இயக்குநர் ஒருவருக்கும் தற்போது லேசாக அரசியல் ஆர்வம் எழுந்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அடிக்கடி அரசியல் ரீதியான விழாக்களில் அவர் பங்கேற்று பேசி வருவது மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி வருவது பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

தூண்டில் போடும் அரசியல்வாதிகள்

தூண்டில் போடும் அரசியல்வாதிகள்

அந்த இயக்குநரின் அரசியல் ஆர்வத்தை அறிந்து கொண்ட சில அரசியல் தலைவர்கள் அவரை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள பெரிய தூண்டில்களை சமீப காலமாக போட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் எழுந்துள்ளன. அந்த தூண்டிலில் மீனாக அந்த இயக்குநர் சிக்குவாரா? அல்லது மானாக துள்ளிக் குதித்து ஓடுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தங்கள் பக்கம்

தங்கள் பக்கம்

இயக்குநருக்கு சில ஆசைகளை காட்டி அவரை தங்கள் பக்கம் இழுக்க ஒரு பெரிய அரசியல் தலைவர் ஓப்பனாகவே செயல்பட்டு வருவதை பார்த்து இயக்குநருக்கே லைட்டா ஜெர்க்காகி தற்போது அவருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

அமைதி காக்க வேண்டும்

அமைதி காக்க வேண்டும்

பேசாமல், அமைதியாக இருந்து விட்டால், கொஞ்ச நாட்களில் இதனை அனைவரும் மறந்து விடுவார்கள், தேவையில்லாமல் தலை கொடுத்து விட வேண்டாம். அது பெரிய சிக்கலில் உங்களை கொண்டு தள்ளிவிடும் என இயக்குநருக்கு மிகவும் நெருக்கமான சில நடிகர்கள் அட்வைஸ் சொல்லி வரும் நிலையில், இயக்குநரும் அதே முடிவை எடுக்கவே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X